ETV Bharat / state

செஞ்சிலுவை சங்கத்தினர் மீது சிபிஐ வழக்குப்பதிவு - பன்வாரிலால்

செஞ்சிலுவை சங்கத்தின் மாநில தலைவரான ஆளுநர் பன்வாரிலால் சார்பில், ஆளுநர் மாளிகையின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவில் கடந்த ஆண்டு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், 2011- லிருந்து இச்சங்கத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

cbi filed case against red cross
cbi filed case against red cross
author img

By

Published : Jan 8, 2021, 8:20 AM IST

சென்னை: இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் 2011-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தமிழக ஆளுநர் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் செஞ்சிலுவை சங்க தமிழக நிர்வாகிகள் 6 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

1920ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் தனியாக செஞ்சிலுவை சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தமிழக பிரிவு அந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. ஜனாதிபதியின் கீழ் செயல்படும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் அந்தந்த மாநில ஆளுநர்கள் மாநில தலைவராக செயல்படுவார்கள்.

இந்த நிலையில், செஞ்சிலுவை சங்கத்தின் மாநில தலைவரான ஆளுநர் பன்வாரிலால் சார்பில், ஆளுநர் மாளிகையின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவில் கடந்த ஆண்டு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், 2011- லிருந்து இச்சங்கத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளை, பல கோடி ரூபாய் பணத்தை கையாளுவதாகவும், அதன் நிர்வாகி ஒருவர், சங்க நிதியை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சங்க நிர்வாகத்துக்கும், விளம்பரத்துக்கும், பிரசாரத்துக்கும் 70 சதவீத நிதியை பயன்படுத்திவிட்டு, வெறும் 30 சதவீத நிதி மட்டும் சமூக பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ரத்த தான முகாம் மூலம் பெறப்படும் ரத்தத்தை அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு பதில், தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2011 முதல் 2019 வரையிலான ஆண்டு காலத்தில் நடந்த வரவு - செலவு கணக்குகளை தணிக்கை செய்தபோது பல முறைகேடுகள் நடந்தது தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து சிபிஐ நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக தலைவர் ஹரிஷ் மேத்தா, சங்கத்தின் பொதுச் செயலாளர் நஷ்ருதீன், பொருளாளர் இந்திரநாத், முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன், மணிஷ் சவுத்ரி, வடிவேல் முகுந்தன் என 6 பேர் மீதும் மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.