ETV Bharat / state

இந்துக் கடவுள்கள் மீது அவதூறு பரப்புவதாக யூ ட்யூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு! - இந்துக் கடவுள்கள் மீது அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்

சென்னை: இந்துக் கடவுள்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் கருத்துகள் பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனல் மீது, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல்
கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல்
author img

By

Published : Jul 13, 2020, 10:13 PM IST

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கறுப்பர் கூட்டம் எனும் யூட்யூப் சேனல் மீது பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியினர் புகார் ஒன்றை அளித்தனர். அதில்"கறுப்பர் கூட்டம் எனும் யூ ட்யூப் சேனலில் இந்துக் கடவுள்களை குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் காணொலி பதிவிடப்படுகிறது.

மேலும் குறிப்பிட்டு இந்துக்கள், இதிகாசங்கள், புராணங்களை அவமானப்படுத்தி பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. அதனால், அந்தச் சேனலின் நெறியாளர் சுரேந்திர நடராஜன் மற்றும் அத்துடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்புகார்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் கறுப்பர் கூட்டம் சேனல் மீது 153 கலகத்தைத் தூண்டுதல், 153 (a) சாதி, மத வெறியைத் தூண்டி விடுதல், 295 இரு மதங்களுக்கிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: யூட்யூப் பயன்படுத்துவதைக் குறைக்க புதிய வசதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.