ETV Bharat / state

ஊரடங்கு விதி மீறல்: சென்னையில் 2,409 வழக்குகள் பதிவு - 2,409 வழக்குகள் பதிவு

சென்னை: தளர்வுகளற்ற முழு ஊரடங்கில் தேவையின்றி வெளியே சுற்றிய 2,409 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியதாக 2409 வழக்குகள் பதிவு!

author img

By

Published : May 25, 2021, 5:29 PM IST

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் நேற்று (மே.24) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 வாகன சோதனைச் சாவடிகள் அமைத்து காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசியத் தேவையின்றி இ-பதிவு இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதனடிப்படையில், நேற்று (மே.24) மட்டும் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றியதாக 2,409 வழக்குகள் பதிவு செய்து, 1,805 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் முகக்கவசம் அணியாமல் சுற்றியதாக 1,946 நபர்கள் மீதும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காத 188 நபர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாளை முதல் ட்விட்டர், பேஸ்புக் முடக்கமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.