கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அதிமுக பெண் வழக்கறிஞர்கள் அதிசயா, ராஜலட்சுமி ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
புகார் மனுவில், 'தேர்தல் பரப்புரையின்போது திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் லியோனி, முன்னாள் அமைச்சர் வளர்மதி குறித்து அவதூறாகப் பேசியுள்ளார்.
திமுக எம்.பி., தயாநிதிமாறன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தொடர்ந்து பெண்களை அவமதிக்கும் வகையில் பேசி தேர்தல் விதிகளை மீறி பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மூவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் மூவர் மீதும் ஆபாசமாக பேசுதல், கலகம் செய்யும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நாளை மாலையுடன் ஓய்கிறது பரப்புரை