ETV Bharat / state

கனிமொழிக்கு எதிரான வழக்கை தூத்துக்குடி வாக்காளர் நடத்தலாம் - உயர் நீதிமன்றம் உத்தரவு! - உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதிலாக, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

High court
author img

By

Published : Nov 12, 2019, 11:21 PM IST

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டதால், தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி அவர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், கனிமொழிக்கு எதிராக தாக்கல் செய்யபட்ட தேர்தல் வழக்கை திரும்பப் பெறுவது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட உத்தரவிட்டார்.

பத்திரிகைகளில் விளம்பரம் வெளியானதைத் தொடர்ந்து, தமிழிசை சௌந்தரராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி தூத்துக்குடி தொகுதி வாக்காளரான முத்துராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழிசைக்கு பதிலாக வழக்கு தொடர்ந்து நடத்தவுள்ள முத்துராமலிங்கம் பாஜக உறுப்பினர். அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார். ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் திமுகவுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசைக்காக பிரசாரம் செய்துள்ளார். இந்த தகவல்களை மறைத்த முத்துராமலிங்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

மனுதாரர் முத்துராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவுகள் உள்ளதே தவிர, வழக்கிற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத மற்ற விஷயங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் முத்துராமலிங்கம் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்காளர்தான் என்பதற்கான சான்றுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தமிழிசை தொடர்ந்த தேர்தல் வழக்கை முத்துராமலிங்கம் ஏற்று நடத்த அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, முத்துராமலிங்கம் அத்தொகுதியின் வாக்காளர்தான் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முத்துராமலிங்கத்திற்கு உரிமை உள்ளதாகக் கூறி, தமிழிசைக்கு பதில் தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.

மேலும், தேர்தல் வழக்குகள் என்பது சம்பந்தப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர்தான் அவ்வழக்கில் தீர்வு கிடைக்கப் பெறுவதாக கருத்து நிலவுவதால், இந்த வழக்கை விரைந்து முடிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது அவர்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: கனிமொழிக்கு எதிரான வழக்கு: களமிறங்கிய வாக்காளர்!

Intro:Body:திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, தெலுங்கானா மாநில ஆளுனராக நியமிக்கபட்டதால், தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி தமிழிசை சவுந்தரராஜன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கனிமொழிக்கு எதிராக தாக்கல் செய்யபட்ட தேர்தல் வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட உத்தரவிட்டார்.

பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியியானதை தொடர்ந்து, தமிழிசை சவுந்தர்ராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, தொகுதி வாக்களரான முத்து ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று நீதிபதி எஸ். எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழிசைக்கு பதிலாக வழக்கு தொடர்ந்து நடத்த உள்ள முத்துராமலிங்கம் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார். ஸ்ரீ வைகுண்டம் காவல் நிலையத்தில் தி.மு.க வுக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசைக்காக பிரச்சாரம் செய்துள்ளார்.இந்த தகவல்களை மறைத்து முத்துராமலிங்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்

மனுதாரர் முத்துராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவுகள் உள்ளதே தவிர,
வழக்கிற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத மற்ற விஷயங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் முத்துராமலிங்கம் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வாக்காளர் தான் என்பதற்கான சான்றுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தமிழிசை தொடர்ந்த தேர்தல் வழக்கை முத்துராமலிங்கம் ஏற்று நடத்த அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, முத்துராமலிங்கம் அத்தொகுதியின் வாக்காளர் தான் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முத்துராமலிங்கத்திற்கு உரிமை உள்ளதாக கூறி, தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதில் தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.

மேலும்,தேர்தல் வழக்குகள் என்பது சம்பந்தப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் தான் அவ்வழக்கில் தீர்வு கிடைக்கப் பெறுவதாக கருத்து நிலவுவதால்,இந்த தேர்தல் வழக்கை விரைந்து முடிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது அவர்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.