சென்னை: பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் மனுதர்மம் இருப்பதாகக் கூறி அதனை தடை செய்ய வலியுறுத்தியும், மனுதர்ம நூலை தீயிட்டு எரித்தும் வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன் உள்பட 250 பேர் மீது தடையை மீறி ஆர்ப்பாட்டம், சட்ட விரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மதிக்காமல் இருத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.