சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று காலை (ஜன.9) நடைபெறுவதையொட்டி, மாநகரத்தின் சாலை முழுவதும் அதிமுகவினர் குத்தாட்ட மேடைகள் அமைத்துள்ளனர். தொடர்ச்சியான மேடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ளன.
கண்டு கொள்ளாத காவல் துறை
இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன. கோயம்பேடு- வானகரம் வழியாக பூந்தமல்லி செல்லும் சாலையில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், போக்குவரத்து நெரிசலை காவல் துறையினர் ஒழுங்குபடுத்தவில்லை. கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் கட்சித் தொண்டர்களையும் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற காவல் துறையினர் அறிவுறுத்தவில்லை.
போக்குவரத்து நெரிசல்
சாலையோரங்களில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சென்னையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில், அதிமுக தொண்டர்களின் செயல்பாடுகள் மக்களுக்கு மேலும் தொந்தரவைக் கூட்டியுள்ளன.
இதையும் படிங்க:நெருங்கும் தேர்தல், நெருக்கும் பாஜக, கூடும் அதிமுக! முக்கிய தீர்மானங்கள் என்னென்ன?