சென்னை, ராயப்பேட்டை பாலாஜி நகர், முதல் தெருவில் வீட்டின் முன்பு நேற்று கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கார் கொளுந்து விட்டு எரிந்ததால், அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது. இது குறித்து கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவினால் கார் எரிந்தது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ராயப்பேட்டை E2 காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
நள்ளிரவில் தீ பிடித்து எரிந்த கார்; ராயப்பேட்டையில் பரபரப்பு! - fire service
சென்னை: மின்கசிவால் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த காரை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.