சென்னை காமராஜ் சாலையில் உள்ள அன்னை சத்தியா நகர் பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து காவல் துறையினர் கடந்த இருதினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த திருநங்கைகளைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அமுல் என்பவர் கஞ்சா பொட்டலங்களைக் கொடுத்து விற்பனை செய்ய சொல்லியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருநங்கைகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அமுல் என்பவரை கைது செய்து விசாரித்ததில், அவர் திருநங்கை சித்ரா என்பவரிடம் மொத்தமாக கஞ்சாவை கொடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து திருநங்கை சித்ராவை இன்று கைது செய்த காவல் துறையினர், அவரிடம் இருந்து 11.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துவிட்டு திருநங்கையை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:புஞ்சைப் புளியம்பட்டி சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை!