ETV Bharat / state

வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கி.மீ. அதிகரித்து பிறப்பித்த அறிவிப்பு ரத்து! - chennai latest news

நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கிலோ மீட்டர் அதிகரித்து ஒன்றிய அரசு பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highways vehicle speed  vehicles  speed of vehicles on highway  வாகனங்களின் வேகத்தை அதிகரித்து பிறப்பித்த அறிவிப்பு ரத்து  சென்னை உயர்நீதி மன்றம்  வாகனங்களின் வேகம்  வாகன விதிகள்  vehicles rules  chennai news  chennai latest news  chennai high court
chennai high court
author img

By

Published : Sep 15, 2021, 6:25 AM IST

சென்னை: 2013ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில், நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் பல் மருத்துவர் ஒருவருக்கு, 90 விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டது.

அவருக்கான இழப்பீட்டு தொகையை 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாயில் இருந்து, 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி வழங்க நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

மறுபரிசீலனை

மேலும், அந்த தீர்ப்பில், எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று ஒன்றிய அரசு 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதனைதொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டுமென உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டுமெனவும், அதேபோல இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.

மத்திய அரசின் அறிவிப்பு ரத்து

இந்நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உயர் நீதிமன்றம், சாலை மேம்பாட்டையும், இன்ஜின்களின் செயல்பாட்டை அதிகரிக்கவும், வாகனங்களின் வேகம் அதிகரிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு கூறிய விளக்கத்தை ஏற்க மறுத்து, 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், 2014ஆம் ஆண்டு அறிவிப்பின்படி, வாகனங்களுக்கு 60 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை நிர்ணயிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு, அதன் அடிப்படையில் புதிய அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்சூரன்ஸ் கட்டாயம் - உத்தரவை திரும்பப் பெற்றது நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.