ETV Bharat / state

கேபிள் டிவி ஆபரேட்டர் கொலை: 9 பேர் கைது

நில தகராறு காரணமாக கேபிள் டிவி ஆபரேட்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்பது பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Cable TV operator killed: 9 arrested in porur

author img

By

Published : Jan 20, 2021, 5:50 PM IST

சென்னை: போரூர் அடுத்த மதனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம் கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார். இவர் நேற்று மகன் தானேஸ்வரனுடன் மதனந்தபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் பொன்னுரங்கத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதில் அவரது மகன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து மாங்காடு காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்ததில், பூவிருந்தவல்லியை சேர்ந்த ஒன்பது பேரை கைது செய்தனர். விசாரணையில் யாசிமும், பொண்ணுரங்கத்தின் தங்கையும் ஒரே இடத்தை வாங்கியதும், இதில் இருவருமே நிலம் தங்களுக்கு சொந்தம் என கூறி வந்ததும் தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த யாசிம் நில தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், பல கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தார். இருப்பினும் இருவரிடையே எவ்வித உடன்பாடும் எட்டப்படாததால், பொன்னுரங்கத்தை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து ஒன்பது பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் பயன்படுத்திய ஆயுதம், வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.