தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி உதயகுமார், விஜய பாஸ்கர் மற்றும் தலைமைச் செயலாளர், முக்கிய துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏழு தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தை குத்தகைக்கு விடும் ஒப்பந்தத்தை புதுபிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பாஜக கேட்டால் மத்திய அமைச்சரவையில் அதிமுக பங்குபெறும்' - பொள்ளாச்சி ஜெயராமன்