போக்குவரத்து துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய அரசு தலைமை கொறடா கோவி.செழியன்."போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது திமுக என்றார்.
அப்போது பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, "வெளிநடப்பு செய்வது எங்களின் உரிமை என்றும், ஜெயலலிதாவின் பெயர் புறக்கப்பணிக்கப்பட்டதாகவும், பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக வெளிநடப்பு செய்தோம் என்றார். மேலும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் அவையில் இல்லாத போது அவரை பற்றி ஏன் பேச வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தீர்மானம் - நிலைப்பாடு என்ன?
பின்னர் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "சரி காலையில் சிஏஏ தீர்மானத்தின் போது வெளிநடப்பு செய்து விட்டீர்கள். இப்போது கூறுங்கள், இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா? இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
அதிமுக நிலைப்பாடு
இதற்கு பதிலளித்த எஸ்.பி.வேலுமணி, " சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் வராது என்பதை எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக இருக்கும் போதே தெரிவித்திருக்கிறார் என்றும், அதிமுக எப்போதுமே சிறுபான்மையினருக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட கட்சி என்றும் கூறினார்.
என்றும் பாதுகாப்பு
மேலும், 1993 பாபர் மசூதி பிரச்சினை வந்தபோது, தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தது அதிமுக தான் என்றும் தெரிவித்தார்.
மீண்டும் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "பாபர் மசூதி இடிப்பிற்கு இங்கிருந்து கல் அனுப்பியது யார்? என கேள்வி எழுப்பினார். இந்த விவாதத்தை இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என சபாநாயகர் தெரிவித்ததையடுத்து விவாதம் முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க :சிஏஏவுக்கு எதிரான தீர்மானம்: கை கொடுத்த காங்கிரஸ்