சென்னை: டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையரகத்தில் நிதித்துறை பொது மேலாளராக இருந்த C.V. தீபக், சென்னை விமான நிலைய இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இயக்குனராக டாக்டர் சரத்குமார் 2 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். இவரது பதவி காலம் கடந்த ஜனவரி மாதம் நிறைவு அடைந்தது. ஆனால் சென்னையில் கட்டப்பட்டு வந்த ஒருங்கிணைந்த புதிய விமான முனையம் திறப்பு விழா வரை சரத்குமார் பதவியை தொடர்ந்து வந்தார்.
இதையும் படிங்க: Arikomban Update: தேனியில் முதல் உயிர் பலி வாங்கிய அரி கொம்பன் யானை!
சென்னை விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், சென்னை விமான நிலைய இயக்குனராக இருந்த சரத்குமார் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு டெல்லி தலைமையகத்தில் உள்ள இந்திய விமானங்கள் இயக்கம் பிரிவு உறுப்பினர் பதவியை ஏற்றார்.அதன் பின்பு உடனடியாக சென்னை விமான நிலையத்திற்கு புதிய இயக்குனர் நியமிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: ரூ.10 இருந்தால் போதும் அளவில்லா சாப்பாடு.. ஈரோடில் திறக்கப்பட்ட புதிய உணவகம்!
சென்னை விமான நிலைய பொது மேலாளராக இருக்கும் எஸ்.எஸ். ராஜு, கூடுதல் பொறுப்பாக,சென்னை விமான நிலைய இயக்குனர் பதவியை வகித்து வந்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையராகத்தில் நிதித்துறை பொது மேலாளராக இருந்த C.V. தீபக், சென்னை விமான நிலைய இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தீபக், ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் துணை பொது மேலாளர் பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து பதவி உயர்வு பெற்று,டெல்லி தலைமையகத்தில், நிதித்துறை பொது மேலாளராக பதவியில் இருந்தார். அதன்பின்பு தற்போது, சென்னை விமான நிலைய இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: MS Dhoni retirement: ஐபிஎல் ஓய்வு குறித்து பேசிய தோனி.. அதிலும் ஒரு ட்விஸ்ட்!