சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று (ஜன.10) வழக்கம் போல் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலில், “மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று வழக்கம் போல் அனைத்து பேருந்துகளும் அட்டவணைப்படி, தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது.
-
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று (10/01/2024) வழக்கம்போல் அனைத்து பேருந்துகளும் அட்டவணைப்படி தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது. pic.twitter.com/rMlKWtPQAM
— MTC Chennai (@MtcChennai) January 10, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று (10/01/2024) வழக்கம்போல் அனைத்து பேருந்துகளும் அட்டவணைப்படி தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது. pic.twitter.com/rMlKWtPQAM
— MTC Chennai (@MtcChennai) January 10, 2024மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று (10/01/2024) வழக்கம்போல் அனைத்து பேருந்துகளும் அட்டவணைப்படி தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகிறது. pic.twitter.com/rMlKWtPQAM
— MTC Chennai (@MtcChennai) January 10, 2024
பயணிகள் பேருந்து இயக்கம் தொடர்பாக எந்த வித அச்சமும் இன்றி பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் முழுமையாக கண்காணித்து வருகிறார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறி உள்ளார்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி!
மேலும், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், இன்று (ஜன.10) மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் அனைத்து பேருந்துகளும் முழுமையாக இயக்குவது குறித்து, பெரம்பூர் பணிமனையில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், சென்னை மற்றும் பிற கோட்டங்களில் உள்ள பேருந்துகளின் இயக்கங்கள் குறித்து போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (ஜன.10) காலை 5 மணி நிலவரப்படி, சென்னை போக்குவரத்துக் கழகம் - 197.83%, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் - 100%, விழுப்புரம் கோட்டம் - 94.40% சேலம் கோட்டம் - 100%, கோயம்புத்தூர் கோட்டம் - 90.32%, மதுரை கோட்டம் - 99.07%, கும்பகோணம் கோட்டம் - 95.67%, திருநெல்வேலி கோட்டம் - 100% என மொத்தமாக - 113.16 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோட்டங்கள் | சதவீதம் (%) |
பெருநகர சென்னை போக்குவரத்து கழகம் | 197.83 |
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் | 100 |
விழுப்புரம் | 94.40 |
சேலம் | 100 |
கோயம்புத்தூர் | 90.32 |
மதுரை | 99.07 |
கும்பகோணம் | 95.67 |
திருநெல்வேலி | 100 |
மொத்தம் | 113. 16 |
இந்நிலையில், பெருநகர சென்னை போக்குவரத்துக் கழகத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி, மொத்தம் 112% பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முன்னதாக, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதன்படி, நேற் று(ஜன.9) முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்