ETV Bharat / state

மெட்ரோ தடுப்பில் பேருந்து மோதி விபத்து! - metro work

சென்னை: மெட்ரோ பணி தடுப்பு இரும்பு வேலி மீது மோதி திருவொற்றியூர் மாநகரப் பேருந்து பலத்த சேதம் அடைந்தது, அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த பயணிகள் உயிர் தப்பினர்.

bus
author img

By

Published : Aug 10, 2019, 4:16 PM IST

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு வருடங்களாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் பட்டினப்பாக்கத்தில் இருந்து சுங்கச்சாவடிவரை செல்லும் பேருந்து சுங்கச்சாவடி அருகே வந்தபோது மெட்ரோ ரயில் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு இரும்பு வேலி மீது மோதி பலத்த சேதம் அடைந்தது. இதில் மாநகரப் பேருந்தின் முன் கண்ணாடிகள் நொறுங்கின. உடனே தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மெட்ரோ தடுப்பில் பேருந்து மோதி விபத்து!

அதனைத் தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில் மாநகரப் பேருந்து ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தியின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் மாநகரப் பேருந்தில் பழுது ஏதேனும் உள்ளதா என்பது தொடர்பாக தொடர்ந்து போக்குவரத்து புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

Intro:சென்னை திருவொற்றியூர்
மாநகரப் பேருந்து மெட்ரோ பணி தடுப்பு இரும்பு வேலி மீது மோதி மாநகரப் பேருந்து பலத்த சேதம் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்Body:சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு வருடங்களாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மாநகரப் பேருந்து தடம் எண் 32A பட்டினப்பாக்கத்தில் இருந்து சுங்கச்சாவடி வரை செல்லும் பேருந்து சுங்கச்சாவடி அருகே வந்த போது மெட்ரோ ரயில் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு இரும்பு வேலி மீது மோதி மாநகரப் பேருந்து பலத்த சேதம் அடைந்தது. இதில் மாநகரப் பேருந்தின் முன் கண்ணாடிகள் நொறுங்கின. உடனே தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர் அதனை தொடர்ந்து முதல் கட்ட விசாரணையில் மாநகரப் பேருந்து ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி கவனக்குறைவால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் மாநகரப் பேருந்தில் பழுது ஏதேனும் உள்ளதா என்று தொடர்ந்து போக்குவரத்து புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். இந்த விபத்தால் சென்னை திருவொற்றியூர் சுங்கசாவடி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:சென்னை திருவொற்றியூர்
மாநகரப் பேருந்து மெட்ரோ பணி தடுப்பு இரும்பு வேலி மீது மோதி மாநகரப் பேருந்து பலத்த சேதம் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.