பொறியியல் மாணவர்களுக்கு தொழில்சார் கல்வி; அண்ணா பல்கலைக்கழகம் - பிஎஸ்என்எல் புரிந்துணா்வு! - chennai news
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் இணைந்து பொறியியல் படிக்கும் மாணவர்களுக்குத் தொழில் திறன் சார் கல்வி குறித்து சான்றிதழ் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
Published : Dec 28, 2023, 11:46 AM IST
சென்னை: அண்ணாப் பல்கலைக் கழகம் மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஆகியவை இணைந்து பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தொழில்நுட்பம் தொடர்பான சான்றிதழ் படிப்புகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதற்கான ஒப்பந்தத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், பிஎஸ்என்எல் தலைமை மேலாண்மை இயக்குநர் பிரவின் குமார் பூர்வர் ஆகியோர் நேற்று (டிச.27) கையெழுத்திட்டனர்.
இது குறித்து பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விழாவில் பேசிய துணைவேந்தர் வேல்ராஜ், 'அண்ணா பல்கலைக் கழகம் பிஎஸ்என்எல் இணைந்து மாணவர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பினை அளிக்க உள்ளோம். இதன் மூலம் கம்யூனிகேஷன் துறையில் உள்ள மாணவர்களின் திறன் வளர்க்கப்படும். கடந்த 30 வருடங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கம்யூனிகேஷன் வளர்ச்சியும் முக்கிய காரணம்.
வரும் 10 ஆண்டுகளில் 5ஜி வளர்ச்சி (5G) அதிகளவில் இருக்கும். இதனால் தான், ஆர்ட்டிபிசியல் இன்டிலிஜென்ட் (AI _Artificial Intelligence), இண்டர்நெட் ஆப் திங்க்ஸ் (Internet of Things) போன்ற பெரிய துறைகளிலும் வளர்ச்சி இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய கிராமங்களிலும் கம்யூனிகேஷன் தொடர்பு ஏற்படுத்துவதற்கு பிஎஸ்என்எல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு இது குறித்த திறனை வளர்க்கவும் குறுகிய கால சான்றிதழ் படிப்பும் அளிக்கப்பட உள்ளது.
-
BSNL signed an MoU with Anna University, Chennai.
— Anna University, Chennai (@auvcochennai) December 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The Chairman and Managing Director of BSNL & MTNL, Shri Pravin Kumar Purwar, presided over the event and formalized the collaborations by exchanging MoUs with Dr. R. Velraj, Vice Chancellor Anna University#bsnlaucollaboration pic.twitter.com/Gum6pc2Bj4
">BSNL signed an MoU with Anna University, Chennai.
— Anna University, Chennai (@auvcochennai) December 27, 2023
The Chairman and Managing Director of BSNL & MTNL, Shri Pravin Kumar Purwar, presided over the event and formalized the collaborations by exchanging MoUs with Dr. R. Velraj, Vice Chancellor Anna University#bsnlaucollaboration pic.twitter.com/Gum6pc2Bj4BSNL signed an MoU with Anna University, Chennai.
— Anna University, Chennai (@auvcochennai) December 27, 2023
The Chairman and Managing Director of BSNL & MTNL, Shri Pravin Kumar Purwar, presided over the event and formalized the collaborations by exchanging MoUs with Dr. R. Velraj, Vice Chancellor Anna University#bsnlaucollaboration pic.twitter.com/Gum6pc2Bj4
Wifi வசதி: அண்ணா பல்கலைக் கழக வளாகம் வைபை வசதிக் கொண்டதாக மாற்றப்பட உள்ளது. கல்விக்கு அடிப்படையாக தற்பொழுது தகவல் தொழில்நுட்பம் தேவையாக உள்ளது. நகர்ப்புறங்களில் தனியார் நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்தை அளிக்கின்றன. கிராமப்புறங்களில் பிஎஸ்என்எல் தான் உள்ளது' என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் தலைமை மேலாண்மை இயக்குநர் பிரவின்குமார் பூர்வர் கூறும்போது, 'இன்றைய இளைஞர்கள் படிப்பு மட்டும் இன்றி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான், புதிய உற்பத்தியை வெளிக்கொணர முடியும்.
கல்வியை கற்றுத் தருவதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி அதிகளவில் தேவைப்படுகிறது. கம்யூனிகேஷன் தொடர்பான குறுகியகால பாடப்பிரிவுகள் துவக்கப்படும். ஐஐடியில் டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத்தை அனைத்து கிராமங்களிலும் அளிப்பதற்காக ஃபைபர் நெட்வொர்க் கேபிள் (Fiber network cable) புதைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
அதன்படி, 6 லட்சம் கிராமங்களில் இந்த வைபை வசதியை பிஎஸ்என்எல் நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் மூலம், அதிக மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வாய்ப்புள்ளது. வரும் காலங்களில் அதிகளவில் வேலைவாய்ப்பும் உள்ளது' என கூறினார்.
இதையும் படிங்க: கடற்கரைப் பகுதிகளைச் சூழ்ந்த இடர்கள்.. ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு ஆபத்தா? - வல்லுநர்களின் அதிர்ச்சியூட்டும் பதில்கள்!