பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பண்டிகை கால சலுகைகள் குறித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், 1,699 ரூபாய்க்கான தற்போதைய வேலிடிட்டி நாட்களை 365லிருந்து 455 நாட்களாக நீட்டிப்பு செய்துள்ளது. நாளுக்கு இரண்டு ஜிபி டேட்டா, 250 ஃபோன் கால்கள், 100 எஸ்எம்எஸ், இதுதவிர இலவச காலர் ட்யூன் போன்ற வசதிகளை 2019ஆம் ஆண்டு முழுவதுக்குமாக அறிவித்துள்ளது.
மேலும், புதிய வாடிக்கையாளர்களை வரவேற்கும் விதமாக 105, 107 ரூபாய்க்கான வவுச்சர்களில் அளவில்லா ஃபோன் கால்கள், எஸ்எம்எஸ் வசதிகள் கொடுக்கப்படவிருக்கின்றன.
186 மற்றும் 187 ரூபாய்க்கான வவுச்சர்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுவந்த ஒரு ஜிபி டேட்டாவுடன் மூன்று ஜிபி டேட்டாவும், அளவில்லா வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் வசதிகள் வழங்கப்பட உள்ளது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'எதிர்பார்த்தது 640 கோடி, கிடைத்ததோ ரூ.72 ஆயிரம் கோடி'- ஐஆர்சிடிசி பங்குக்கு கடும் கிராக்கி