ETV Bharat / state

கைதிகள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஏஎஸ்பி பல்பீர் சிங் சஸ்பெண்ட் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்!

author img

By

Published : Mar 29, 2023, 1:10 PM IST

Updated : Mar 29, 2023, 2:01 PM IST

நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், சம்மந்தப்பட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.29), பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் படுகொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதேபோல் நெல்லை அம்பாசமுத்திரத்தில் குற்றவாளிகளின் பல்லை பிடுங்கிய காவல்துறை அதிகாரி பல்பீர் சிங் குறித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி முத்து உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

இதற்கு பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது, "அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் 5 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் இறந்ததாக தெரிய வருகிறது. அவரது மனைவி சுமலதா கொடுத்த புகார் அடிப்படையில் செம்பியம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாரணையில் கொலையான இளங்கோவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் என்பவரை பொதுவெளியில் வைத்து தாக்கியதாகவும், இது தொடர்பாக முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. காவல்துறையினர் இரண்டு மணி நேரத்தில் வழக்கில் தொடர்புடைய கணேசன், வெங்கடேசன், அருண்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களின் ஒருவர் இளைஞ்சிறார். புலன் விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி விவகாரத்தை பொருத்தமட்டில் குற்றச்செயலில் ஈடுபட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிலரின் பற்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன் சேரமாதேவி சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்பீர் சிங் ஏஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளார். அரசு எந்த வித சமரசமும் மேற்கொள்ளாது என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளார் என தெரிவித்துக் கொள்கிறேன். முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதி மோதல்களில் ரவுடிகளால் நடைபெற்ற குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 1,670 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சியில் 1,596 கொலை சம்பவங்கள் நடைபெற்றது. ஆண்டு ஒன்றுக்கு 74 கொலை சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கொலைகள் தடுக்கப்பட்டிருக்கிறது, காவல்துறை சுதந்திரமாக விரைவாக செயல்பட்டு, கொலையாளிகள் யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமோ அரசியலோ பார்க்காமல் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: "96 இடங்களில் காயம்; சாத்தான்குளத்தை விட கொடூரம்" கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடித்துக்கொலை!

Last Updated : Mar 29, 2023, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.