நாகப்பட்டினம்: பண்ணத்தெருவில் உள்ள பண்ணார பரமேஸ்வர சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெண்கல விநாயகர் சிலை, சோமஸ்கந்தர், சந்திரசேகர அம்மன், நடன சம்பந்தர், பிடாரி அம்மன், நின்ற சந்திரசேகர், நின்ற விநாயகர், தேவி, அஸ்திரதேவர் சிலை உள்ளிட்ட 11 சிலைகள் திருடப்பட்டன. இந்த சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் வெண்கல விநாயகர், தேவி சிலைகள் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்த சிலைகள் 1970-களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இப்போது அமெரிக்காவின் நார்டன் சைமன் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் சர்வதேச சந்தையில் 3 கோடி ரூபாய் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட சிலைகள் அமெரிக்க ஏல மையத்தில் கண்டுபிடிப்பு