சென்னை எம்ஜிஆர் நகர் புகழேந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (33). இவர் கோயம்பேடு அருகே சின்மயா நகர் காளியம்மன் கோயில் தெருவில் ஏழு ஆண்டுகளாக சொந்தமாக பல்பொருள் அங்காடி நடத்திவருகிறார்.
கடந்த 3ஆம் தேதி இரவு வியாபாரம் முடிந்து ராஜேஷ் குமார் பல்பொருள் அங்காடியைப் பூட்டிவிட்டுச் சென்றார். நேற்று (டிச. 04) காலை வழக்கம்போல் கடையைத் திறக்க வந்தபோது கடையின் மேற்கூரை உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கடையினுள் சென்று பணப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்த மூன்று லட்சம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. இதனையடுத்து, ராஜேஷ் குமார் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கடற்படை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பைக் பேரணி!