திருநங்கையின் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - அடையாளம் தெரிய நபர்கள் கைவரிசை - வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
சென்னை: திருமுல்லைவாயல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்று உள்ளனர்.
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், மேற்கு தென்றல் நகர், 8ஆவது தெருவைச் சேர்ந்தவர் திருநங்கை கோபிகா (25).
இவர் கடந்த 12ஆம் தேதி கோபிகா திருப்பதிக்கு சென்றார். மறுநாள் காலை வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவர் பதற்றத்துடன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்குப் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு ஜோடி கம்மல், 1/2 வெள்ளி கிலோ, வெள்ளி கொலுசுகள், ரூ 2ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருடுபோய் இருந்தது.
ஆள்கள் இல்லாததை நோட்டமிட்ட அடையாம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் திருமுல்லைவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:நண்பனை நம்பி சென்ற மாணவிக்கு நேர்ந்த துயரம்... பர்த்டே பார்ட்டியில் கூட்டு பாலியல் வன்புணர்வு!