ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகளில் ஒரே நேரத்தில் விமானங்கள் இயக்கம்: 1 மணி நேரத்தில் 50 விமானங்கள் என அதிகரிப்பு!

சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் 2 ஓடுபாதைகளில் ஒரே நேரத்தில் விமான சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 1 மணி நேரத்தில் 36 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இனி 50 விமானங்கள் வரை இயக்கும் திறன் கொண்டதாக சென்னை விமான நிலையம் மாறி உள்ளது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்
author img

By

Published : Jul 14, 2022, 6:21 PM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகள் உள்ளன. முதல் ஓடுபாதை 3.66 கிலோ மீட்டர் தூரமும், 2ஆவது ஓடுபாதை 2.89 கிலோ மீட்டர் தூரமும் கொண்டது. இதில் முதல் ஓடுபாதையில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி புறப்படுகின்றன. 2ஆவது ஓடுபாதையில் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விமான போக்குவரத்து இயக்கத்தை வேகப்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளை ஒரே சமயத்தில் பயன்படுத்த சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்தது. முதல் பிரதான ஓடுபாதையை புறப்பாட்டிற்காகவும், 2ஆவது ஓடுபாதையை விமானங்கள் தரையிறங்குதல், சிறிய ரக விமானங்கள் புறப்பாட்டிற்கு என திட்டமிடப்பட்டது.

விமானங்களை துரிதமாக இயக்க முடியும் : இதற்காக சென்னை விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. சோதனை அடிப்படையில் 2 ஓடுபாதைகளில் ஒரே நேரத்தில் விமானங்கள் இயக்கப்பட்டன.

சென்னை விமான நிலையம்

இதனிடையே தரையிறங்கும் விமானங்கள் விரைந்து வந்து விமானங்கள் நிற்கும் நடைமேடைக்கு வருவதற்கு ஏதுவாக, ஏற்கனவே வளைவாக இருந்த டாக்ஸிவே தற்போது நேராகப்பட்டு பிராவோ டாக்ஸிவேயாக இன்று (ஜூலை 14) முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இது குறித்து சென்னை விமான நிலைய அலுவலர் ஒருவர் கூறுகையில்," சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் ஒரு ஓடுபாதையிலும் மற்றொரு ஓடுபாதை ‘டாக்ஸிவே’ இணைப்பு பாதையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டாக்ஸிவே ‘பி’ என்ற ‘பிராவோ’, முன்னதாக நேராக செல்லாமல் வளைந்து செல்லும் வகையில் இருந்தது.

இதனால் தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்கள் டாக்ஸிவேயில் விரைவாக செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த டாக்ஸிவே ‘பி’ தற்போது நேர்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் டாக்ஸிவேயில் காத்திருக்க வேண்டியதில்லை. விமானங்களை துரிதமாக இயக்க முடியும்" என்று தெரிவித்தார்.

முதல் விமானத்திற்கு வரவேற்பு : மேலும், "சென்னை விமான நிலையத்தில் டாக்ஸிவே சீரமைப்பு, கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி, 2 ஓடுபாதைகளில் ஒரே நேரத்தில் விமானங்கள் இயக்குவது, சீரமைக்கப்பட்ட டாக்ஸிவேயில் விமானங்கள் இயக்குவது என அனைத்தும் சோதனை அடிப்படையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

இதையடுத்து இன்று (ஜூலை 14) முதல் ஒரே நேரத்தில் 2 ஓடுபாதைகளையும் செயல்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் மூலம் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகளும் ஒரே நேரத்தில் இயக்கப்படுகிறது. இதுவரை 1 மணி நேரத்தில் 36 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இனி 50 விமானங்கள் வரை இயக்கும் திறன் கொண்டதாக மாறி உள்ளது. விமானங்கள் தரையிறங்குவது, புறப்பாடுகளில் இனி அதிகமான தாமதம் ஏற்படாது" என அலுவலர் கூறினார்.

2 ஓடுபாதைகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இரண்டாவது ஓடு பாதையில் வந்து இறங்கிய முதல் விமானத்திற்கு இரு பக்கங்களிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: திமிங்கலம் வடிவிலான "ஏா்பஸ் பெலுகா" விமானம் சென்னை வருகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.