ETV Bharat / state

போனில் பேச மறுத்த காதலன் - காதலி தூக்கிட்டு தற்கொலை! - Boyfriend hangs

காதலன் தன்னுடன் போனில் பேச மறுத்ததால், மனமுடைந்த காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போனில் பேச மறுத்த காதலன் - காதலி தூக்கிட்டு தற்கொலை!

author img

By

Published : May 30, 2022, 6:53 PM IST

சென்னை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர், சென்னை குரோம்பேட்டை லஷ்மிபுரம் முத்துமாரி அம்மன் கோவில் தெருவில் தனது தோழி ஒருவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இவர், சென்னை விமான நிலையத்தில் பணியாளராகவும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது காதலனுடன் தொலைபேசியில் தன்னிடம் பேசுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், காதலன் அதற்கு பேச மறுத்துள்ளார்.

இதனால், மனமுடைந்த அப்பெண் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய தோழி, இளம்பெண் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக, இது குறித்து குரோம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து குரோம்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். காதலன் போனில் பேச மறுத்ததால், காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.