ETV Bharat / state

டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் சிறுவன் படுகாயம்

சென்னை: கோட்டூர்புரம் ஏரிக்கரை பகுதியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் படுகாயம்
author img

By

Published : Apr 27, 2019, 10:30 AM IST

Updated : Apr 27, 2019, 10:44 AM IST

சென்னை கோட்டூர்புரம் ஏரிக்கரையைச் சேர்ந்தவர்கள் வெங்கட்ராமன் -விஜயலட்சுமி தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு கார்த்திக், சாய்சரண் ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது, கோடை கால விடுமுறை என்பதால் அப்பகுதியில் வசிக்கும் அனைத்து சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனிடையே, சாய்சரண் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இடித்ததில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிறுவன் சாய்சரண் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அந்த சிறுவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க இயலவில்லை. உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிறுவன் மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். இதுவரை, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மின்சாரம் சரி செய்யப்படவில்லை. சிறுவர்கள் விளையாடும் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வைத்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை கோட்டூர்புரம் ஏரிக்கரையை சார்ந்தவர் வெங்கட்ராமன் மற்றும் விஜயலட்சுமி தம்பதியினர்.

 இவர்களுக்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் கார்த்திக் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். இளைய மகன் சாய்சரண். (வயது 7) கோடை கால விடுமுறை என்பதால் அப்பகுதியில் வசிக்கும் அனைத்து சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். சாய்சரண் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள பூங்காவின் விளையாடி கொண்டிருந்தபோது அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் இடித்ததில் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிறுவன் சாய்சரண் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். உடனே அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க இயலவில்லை. உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிறுவன் மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுவரை அப்பகுதியின் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளது. தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மின்சாரம் சரி செய்யப்படவில்லை. குறிப்பாக சிறுவர்கள் விளையாடும் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வைத்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
Last Updated : Apr 27, 2019, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.