ETV Bharat / state

நீலம் பதிப்பகத்திற்கு ஏன் கடைகள் மறுப்பு? - புத்தக விற்பனையாளர் சங்கம் விளக்கம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கத்தினர்

இட நெருக்கடி காரணமாகவே புத்தகத் திருவிழாவில், நீலம் பதிப்பகத்திற்கு கடைகள் மறுக்கப்பட்டதாகத் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கத்தினர் திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித்தின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்தனர்.

புத்தக விற்பனையாளர்
புத்தக விற்பனையாளர்
author img

By

Published : Feb 14, 2022, 7:05 PM IST

சென்னை: நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 16) 45ஆவது புத்தகத் திருவிழா தொடங்கவுள்ள நிலையில் அது தொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டாகச் செய்தியாளரைச் சந்தித்தனர்.

அப்போ பேசிய அவர்கள், "45ஆவது புத்தகத் திருவிழாவை வரும் 16ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார். மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழா, நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும்.

தொடக்க நாளில், கருணாநிதி பொற்கிழி விருதுகளையும், பபாசி விருதுகளையும் முதலமைச்சர் வழங்கவுள்ளார். கரோனா கட்டுப்பாடு வழிமுறைகளைப் பின்பற்றி புத்தகத் திருவிழா நடைபெறும். புத்தகம் வாங்க வரும் வாசகர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்காகச் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.

மொத்தம் 800 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 500 பதிப்பாளர்களின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும். டெல்லி, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த பதிப்பாளர்களின் புத்தகங்களும் இதில் இடம்பெறும். வழக்கம்போல், புத்தகங்களுக்கு 10 விழுக்காடு கழிவு விலை சலுகை வழங்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச அனுமதி.

இதுவரை 40 ஆயிரம் டிக்கெட்கள் வலைதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டட மாதிரியில், புத்தகத் திருவிழா நுழைவாயில் அமைக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து நீலம் பதிப்பகத்திற்கு, புத்தகத் திருவிழாவில் ஸ்டால்கள் வழங்குவதில் தொடர்ச்சியாக சிக்கல் இருப்பதாக, திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு.

இட நெருக்கடி காரணமாகவே நீலம் பதிப்பதற்கு ஸ்டால் கொடுக்காமல் இருந்ததாகவும், அதற்குப் பிறகு உறுப்பினர்கள் தலையிட்டு இரண்டு ஸ்டால்கள் ஒதுக்கப்பட்டதாகவும் விளக்கமளித்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு! - அண்ணாமலை குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.