இது தொடர்பாக பொது நூலகத் துறை இயக்குநர் நாகராஜ முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கத்தின்கீழ் இயங்கும் நூலகங்களுக்கு 2018 மற்றும் 19ஆம் ஆண்டில் பதிப்பான தமிழ், ஆங்கிலம் நூல்கள் வாங்க பதிப்பாளர்கள், விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் பரிசீலனைக்காக வரவேற்கப்படுகின்றன.
அரசால் அமைக்கப்படும் நூல் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நூல்கள் மட்டுமே வாங்கப்படும். 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு பதிப்பான தமிழ், ஆங்கில நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
நூல்களை அதற்குரிய வடிவங்களுடன் டிசம்பர் 11ஆம் தேதிக்குள் பொது நூலக இயக்ககம், அண்ணாசாலை, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
நூல் பதிவுக் கட்டண விவரம் மற்றும் நூல்கள் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள், நிபந்தனைகள் ஆகியவை www.connemarapubliclibrarychennai.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன" என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நூலகங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?