ETV Bharat / state

’நாளை நமதே’ நூல் வெளியீட்டு விழா; அமைச்சர் பங்கேற்பு!

சென்னை: அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ‘நாளை நமதே’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

minister
author img

By

Published : Aug 6, 2019, 11:05 AM IST

சென்னை அடையாறில் உள்ள தனியார் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற ‘நாளை நமதே’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில், தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டார். கிறிஸ்தவ பாதிரியார் ஜான்சன் எழுத்தில் உருவாகியுள்ள இந்நூலை அவரே வெளியிட, அதை தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார்.

’நாளை நமதே’ நூல் வெளியீட்டு விழ; அமைச்சர் பங்கேற்பு

பின்னர் பேசிய பாதிரியார் ஜான்சன், இந்த நூல் என் வாழ்க்கையில் பார்த்த இளைஞர்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சாதி மத அடையாளம் இல்லாமல் ஒரு இளைஞன் தன் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்றும், இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மன வலி மற்றும் தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்றும் என் சுய சிந்தனையால் உருவாக்கியுள்ளேன். எனக்கு எம்ஜிஆரை மிகவும் பிடிக்கும் என்பதால் இந்நூலுக்கு ‘நாளை நமதே’ என பெயர் வைத்தேன் என்றார்.

விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பாதிரியார் ஜான்சன் எழுதிய நூலை நான் படித்தேன். இது இளைஞர்களுக்கு எதிர்கால வாழ்க்கையையும், இந்திய ஒருமைப்பாட்டையும் உணரவைக்கும் என்று கூறினார்.

வேலூர் தேர்தல் பற்றிய கேள்விக்கு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றனர். அமைச்சர்கள் கடினமாக உழைக்கிறார்கள், பிரசாரங்களில் ஈடுபடும் வேளையில் மக்களின் வரவேற்பை பார்க்கும்போது தேர்தல் எங்களுக்கு சாதகமாகவே அமையும் என்பது நிச்சயம். நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என தெரிவித்தார்.

Intro:சென்னை அடையாறில் உள்ள தனியார் கிறிஸ்துவ கல்லூரியில் நடைபெற்ற நாளை நமதே என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் தமிழக ஆய்வு மற்றும் தொழில் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

Body:சென்னை அடையாறில் உள்ள தனியார் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற நாளை நமதே என்னும் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக ஆய்வு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்

கிறிஸ்தவ பாதிரியார் ஜான்சன் அவர்கள் எழுதி உருவாக்கிய நாளை நமதே என்னும் இளைஞர்களுக்கான நூலை வெளியிட அதை தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார்

இந்நிகழ்வில் ஐக்கிய அரபு அமைதிக்கான தூதர் ஜான், பெட்ரிஷியா கல்லூரி முதல்வர் இருதயராஜ் ,திரைப்பட நடிகர் ஜோ மாலு, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நாளை நமதே என்னும் நூலை எழுதிய பாதிரியார் ஜான்சன் கூறுகையில்
இந்த நூல் தன் வாழ்க்கையில் பார்த்த இளைஞர்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சாதி மத அடையாளம் இல்லாமல் ஒரு இளைஞன் தன் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்றும் இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மன வலி மற்றும் தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்றும் தன் சுய சிந்தனையால் உருவாக்கி உள்ளேன் என்றும் மேலும் தனக்கு எம்ஜிஆரை மிகவும் பிடிக்கும் என்பதால் இந்நூலுக்கு நாளை நமதே என்னும் பெயரை வைத்தேன் என்றும் கூறினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறுகையில்:

பாதிரியார் ஜான்சன் அவர்கள் எழுதிய நூல் தான் படித்ததாகவும் இதில் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை கவிதைகளையும் மேலும் இளைஞர்களின் மத்தியில் இந்திய ஒருமைப்பாட்டை உணரவைக்கும் என்றும் அவர் எழுதிய நூல் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் சில இடங்களில் அவரின் தலைப்புகள் தன்னை சிந்திக்க வைத்ததாகவும் ஒருவனின் வலியை கூட அவன் எப்படி பொறுமையுடன் கையாண்டு தோல்விகளை கொண்டாட வேண்டும் என்றும் ஓவியக்கலை ஆகவும் அவர் என் நூலில் பதித்து உள்ளதாகவும் மேலும் இந்நூல் இக்காலகட்ட இளைஞர்களுக்கு மிக மிக அவசியமானது என்றும் கூறினார்.

வேலூர் தேர்தல் பற்றிய கேள்விக்கு
முதல்வர் மற்றும் துணை முதல்வர் மிகுந்த கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர்கள் கடினமாக உழைத்து வருவதாகவும் வேலூர் சென்று பிரசாரங்களில் ஈடுபடும் போது மக்களின் வரவேற்பு பார்க்கும்போது தேர்தல் தங்களுக்கு சாதகமாகவே அமையும் என்றும் நிச்சயமாக நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும் மேலும் இத் தேர்தல் வெற்றிக்காக தங்கள் கட்சியினர் அதிக அளவில் வேலைப் பார்த்து வருவதாகவும் கூறினார்

மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் மற்றும் பல மாவட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் கலந்து கொண்டனர்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.