சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அப்போலோ மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் அழைத்து, அப்போலோ மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுத்து தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனால் அந்த ஊழியர் தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் அப்போலோ மருத்துவமனை முழுவதும் சோதனை செய்துள்ளனர்.ஆனால் வெடிகுண்டு இல்லாததால், மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. பின்னர் ஊழியரிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை பெற்றனர். அதை வைத்து சைபர் கிரைம் காவல்துறையினர் அந்த நபரை தேடி வருகின்றனர்.