நாடு முழுவதும் இன்று 73ஆவது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை பாடியில் உள்ள திருவலிதாயம் சிவன் கோயிலில் தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த சமபந்தி விருந்தில் பொதுமக்களுடன் மாஃபா பாண்டியராஜன் உணவருந்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் வைகோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த மாஃபா பாண்டியராஜன், சிறிது நேர யோசனைக்குப் பின்னர், ‘வைகோவின் செயல் அவரது சொந்தக் கட்சி விவகாரம். அதை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அவருக்கு எது சரி என தோன்றுகிறதோ அதை செய்கிறார்’ என்று தெரிவித்தார்.