சென்னை: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தம் வளாகம் உள்ளது. இதன் அருகே உள்ள மரத்தின் அடியில் தலை தனியாகவும் உடல் தனியாகவும் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற கோயம்பேடு போலீசார் விசாரணை செய்தனர். அழுகிய நிலையில் சடலம் கிடந்த இடத்தின் அருகே பீர் பாட்டில், சிப்ஸ் பாக்கெட், ஒரு கயிறு ஆகியவை இருந்து உள்ளன.
இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையா, தற்கொலையா என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அர்ஜென்டினா அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து