ETV Bharat / state

50 வயதில் உலக ஆணழகன் போட்டியில் வென்ற 'தமிழ்நாட்டு ஹல்க்'!

சென்னையைச் சேர்ந்த பாடி பில்டரான ராஜேந்திரன் மணி(50) என்பவர் தாய்லாந்தில் நடந்த உலக ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

50 வயதில் உலக ஆணழகன் போட்டியில் வென்ற ’தமிழ்நாட்டு ஹல்க்’!

author img

By

Published : Dec 14, 2022, 4:30 PM IST

Updated : Dec 14, 2022, 6:56 PM IST

50 வயதில் உலக ஆணழகன் போட்டியில் வென்ற 'தமிழ்நாட்டு ஹல்க்'!

சென்னை: கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர், ராஜேந்தின் மணி(50). இவரது தந்தை குத்துச்சண்டை வீரராக இருந்த நிலையில் தானும் 14 வயது முதல் உடற்பயிற்சி மேற்கொண்டு, உடலைக் கட்டுக் கோப்பாக்கி பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்றார்.

அதே வேளையில் விமானப்படையில் கடை நிலை ஊழியராகப் பணியாற்றிவரும்போது பல்வேறு 'பாடி பில்டர்' போட்டிகளில் பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து திருமணதிற்குப் பிறகும் பாடி பில்டிங் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றார், ராஜேந்திரன் மணி. அவர் மனைவி கொடுத்த ஊக்கத்தால் தேசிய அளவில் 14 முறை இந்திய ஆணழகன் பட்டமும், ஆசிய அளவில் 3 முறை ஆணழகன் பட்டமும் வென்றார்.

மேலும், உலக அளவில் 2013ஆம் ஆண்டு முதல்முறையாக ஆணழகன் பட்டம் வென்ற ராஜேந்திரன் மணி, அதன்பிறகு உலக அளவில் நடைபெற்ற போட்டிகளில் ஐந்து முறை ஆணழகன் பட்டம் பெற்றுள்ளார். தற்போது 50 வயதை நெருங்கும் நிலையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் 44 நாடுகளில் இருந்து பங்கேற்ற வீரர்களுடன் அதிக எடைப்பிரிவில் பல சுற்றுகள் போட்டியிட்டு, வெற்றி பெற்று இந்திய நாட்டுக்கு பெருமையைத் தேடி தந்து, நமது தேசியக் கொடியை முதுகில் போர்த்தி நாட்டிற்கு மட்டுமல்லாமல், தமிழ்நாடே பெருமை கொள்ள வைத்தார்.

50 வயதில் உலக ஆணழகன் போட்டியில் வென்ற ’தமிழ்நாட்டு ஹல்க்’!
50 வயதில் உலக ஆணழகன் போட்டியில் வென்ற ’தமிழ்நாட்டு ஹல்க்’!

இந்நிலையில், இன்று(டிச.14) சென்னை வந்தடைந்த ராஜேந்திரன் மணி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறு - சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரை நேரில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.

அதனையடுத்து தனது வீட்டிற்கு வந்த ராஜேந்திரன் மணியை அவர் மனைவி, மகன்கள், உறவினர்கள் ஆகியோர் வரவேற்று மாலையிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்திந்த ராஜேந்திரன் மணி, “இளைஞர்கள் விளையாட்டு உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளித்து உடல் நலத்தை காத்திட வேண்டும். அப்படி விளையாடுபவர்களுக்கும், உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் ஒழுக்கமான வாழ்வு அமையும்.

50 வயதில் உலக ஆணழகன் போட்டியில் நான் வெற்றி பெற்றேன் என்றால் ஒவ்வொரு இளைஞர்களாலும் வெற்றி பெற முடியும். அதற்கான உணவு முறை, முறையான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், குறைந்தது உடல் நலனைப் பாதுகாக்க நாள்தோறும் ஒருமணி நேரமாவது அனைவரும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்,

தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்துள்ளேன். முதலமைச்சர் தமிழ்நாடு அரசு உதவி செய்யும் என தெரிவித்தார். பாடி பில்டர் துறையில் சாதிப்பவர்களுக்கு அரசுப்பணியில் மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு செய்து தர கோரிக்கை வைத்துள்ளேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: Minister Udhayanidhi Stalin: அமைச்சராக உதயநிதியின் முதல் 3 கையெழுத்து!

Last Updated : Dec 14, 2022, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.