இது தொடர்பான தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் ஜூலை 1ஆம் தேதி மானிய வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், மகாபலிபுரம் கடற்கரையை முன்மாதிரி திட்டமாக தேர்வு செய்து, நீலக்கொடி கடற்கரை திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமென மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது, இயற்கை வளங்கள் மற்றும் கடற்கரையின் சுற்றுச்சூழலை பாதுகாத்து மேம்படுத்துதவதாகும்.
ஜூலை 12ஆம் தேதி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் மகாபலிபுரம் உள்ளிட்ட 12 இந்திய கடற்கரைகளுக்கு 'நீல கொடி சான்றிதழை' வழங்கியுள்ளது. இதன்படி கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் வரம்புக்குட்பட்ட பகுதிகளில் சிசிடிவி பாதுகாப்பு கேமரா, கண்காணிப்பு கோபுரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உடை மாற்றும் அறை, குளியல் அறை, திடக்கழிவு மறுசுழற்சி அமைப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ள ஏதுவாக பீச் குறித்த வரைபடம் ஆகியவை இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
![சென்னை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/bb_2007newsroom_1563604595_265.jpg)
திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு கண்காணித்து செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடற்கரை மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், கடற்கரையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவும் என, வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.