ETV Bharat / state

"மகனுக்கு வாய்ப்பு கிடைக்காது என ஜெயக்குமார் ஆதங்கம்" - பாஜகவின் கரு.நாகராஜன் பதிலடி!

author img

By

Published : Jun 12, 2023, 10:54 PM IST

Updated : Jun 12, 2023, 11:05 PM IST

மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா குறித்து மறைமுகமாக விமர்சித்த அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சு வரம்பு மீறி உள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் வரம்பு மீறிய பேச்சை கண்டித்த கரு.நாகராஜன்

சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சனம் செய்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, பேட்டியில் ஊழல் காலம் என்று சொல்லப்பட்டால் 1991 முதல் 1996 வரையிலான காலம் அதீத மோசமான ஊழல் நிரம்பப்பட்டது என ஒப்புக்கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பப் பட்டதற்கு, தமிழகத்தில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுதியுடைய ஆட்சிகள் என்றும், பல தலைவர்கள் ஆட்சியின் போதே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும், பதிலளித்தார். இந்த பதில் அதிமுகவினரிடையே காட்டு தீ போல் பரவி கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் கொழுந்து விட்டு எரிந்தது.

இதனை கண்டிக்கும் வகையிலும் தமிழக பாஜக மாநிலக் கட்சித் தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அண்ணாமலையின் கூற்று அதிமுக ஆதரவாளர்களிடையே பெரும் கோபத்தை தூண்டியுள்ளதாகவும், மாநிலத் தலைவருக்குக் கூட தகுதி இல்லாதவர் என காட்டமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எதிர் கட்சியை விமர்சிப்பதற்கு பதிலாக கூட்டணிக் கட்சியை இவ்வாறு மறைமுகமாக சாடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்றும், மேலும் இதனை பாஜக மேலிடம் கண்டிக்க வேண்டும். இல்லையேல் கூட்டணி தொடர்வது குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிகழும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது தேர்தல் நடைபெற்றாலும் 30 லோக்சபா தொகுதிகளில் அதிமுக வெல்லும், கர்நாடகாவில் உங்களைப்போல் புறம் தள்ளப்படாது என்றும் அரசியல் வரலாற்றில் அதிமுக ஆலமரம், ஆனால் பாஜகவோ செடி என்று அண்ணாமலையின் கருத்துகளுக்கு செய்தியாளர்களிடம் கடுமையாக விமர்சித்தார்.

ஜெயக்குமாரின் விமர்சனத்திற்கு பதில் கூறும் விதமாக பாஜகவின் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் வரம்பு மீறிய பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் K.அண்ணாமலை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இப்படியாக பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார். தினந்தோறும் பேட்டி கொடுப்பது அவருக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. எங்கள் மாநில தலைவர் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது.

எங்கள் தலைவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் தொடக்கத்தில் இருந்தே உறுதியாக இருக்கிறார். தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார். தமிழக மக்களின் நலனுக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக சிஸ்டத்தை சரிசெய்திட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அவர் என்றுமே உள்ளதை உள்ளபடி பேசுபவர் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். பதவிக்கும், பவுசுக்கும் ஆசைப்பட்டு அண்ணாமலை அரசியலுக்கு வரவில்லை. பல்வேறு புதிய திட்டங்களோடு, மக்கள் வாழ்வு மற்றும் வளம் பெறும் கனவுகளோடு அரசியலுக்கு வந்திருக்கும் அவர் என்றும் மாறப் போவதில்லை. ஜெயக்குமார் போன்ற அரசியல்வாதிகள் தான் தங்களை நேர்வழிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஜெயக்குமார் நுனி மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிப்பகுதியை வெட்டிக் கொண்டு இருக்கிறார். இது போன்ற பேட்டிகளால் பாதிப்பு உங்களுக்குத் தான். உலகின் பெரிய அரசியல் இயக்கமானதாகவும் அதில், 19 கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கத்தை செடி என்கிறார். என்ன நிலையில் இருந்து பேசுகிறார் என்று புரியவில்லை. தென்சென்னை பாராளுமன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று(ஜூன்11) அமித்ஷா கலந்து கொண்டது கூட ஜெயக்குமாருக்கு விரக்தியை தந்திருக்கும் என்று கருதுகின்றேன்.

எங்கே தன் மகன் ஜெயவர்தன் போட்டியிட விரும்பும் தொகுதி பறிபோய் விடுமோ என்று கலங்கிப் போயிருப்பார். கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது தான், இதில் பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது. எனவே எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆங்கிலப் பத்திரிகை பேட்டியை திசை திருப்பி குழப்பம் செய்திட வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கின்றேன்” என அந்த அறிக்கையில் காட்டமாக தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விழுப்புரத்தை தொடர்ந்து கரூரிலும் தீண்டாமை கொடுமை சர்ச்சை.. தமிழக அரசுக்கு தலித் அமைப்பு வைக்கும் கோரிக்கை!

Last Updated : Jun 12, 2023, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.