ETV Bharat / state

உதவி ஆணையர் மீது பாஜக பெண் பிரமுகர் புகார்!

பொது இடத்தில் தன்னை தள்ளிவிட்டு தாக்க முயன்ற உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜக பெண் பிரமுகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பாஜக பிரமுகர் சுமதி வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசியது தொடர்பான காணொலி

author img

By

Published : Oct 19, 2021, 10:05 PM IST

சென்னை: சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், பாஜக மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் தலைமையிலானோர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் உதவி ஆணையர்கள் கலியன், பிரபாகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குறிப்பிடப்பட்டிருந்தது.

புகாரளித்த பின்னர் சுமதி வெங்கடேசன் பேசுகையில், "அக்டோபர் 16ஆம் தேதி இரவு பாஜக செயற்குழு உறுப்பினரான கல்யாணராமனை கைது செய்யப்போவதாக தகவல் வந்தது. இதனையடுத்து அவரது வளசரவாக்கம் வீட்டில் பாஜகவினர் குவிந்தோம்.

பாஜக பிரமுகர் சுமதி வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசியது தொடர்பான காணொலி

ஒருமையில் பேசி தாக்குதல்

அங்கு அவரைக் கைது செய்வதற்கான முறையான ஆவணங்கள் குறித்து கேட்டபோது, காவல் துறையினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது உதவி ஆணையர்களான கலியன், பிரபாகர் ஆகியோர் என்னை தகாத வார்த்தையால் பேசினர்.

அத்தோடு மட்டுமல்லாமல் பெண் என்றும் பாராமல் தள்ளிவிட்டு தாக்க முயன்றனர். ஒருமையில் பேசி காவல்துறையினர் தாக்க முயன்ற சம்பவம், எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.

பெண்களைப் பாதுகாக்க வேண்டியோரே, தாக்க முயன்ற செயல் கண்டிக்கக்கூடியது. என்னைத் தாக்கியதற்குண்டான காணொலி ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்படும் எனத் தெரிவித்துள்ளனர்’ என்றார்.

இதையும் படிங்க: திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.