கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வருமானம் இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், சென்னை நேரு பார்க் ஹவுசிங் போர்டில் உள்ள 300க்கும் மேற்பட்டவர்களுக்கும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:- கடந்த மார்ச் 24ஆம் தேதியிலிருந்து தமிழ்நாடு பாஜக சார்பில் ஏழை மக்கள், சாலையோரம் வசிப்பவர்கள், வெளிமாவட்ட தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய மோடி கிட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் மக்களுக்கு உணவுப் பொருள்கள், ரேஷன் பொருள்கள், முகக் கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
வரும் 20ஆம் தேதி தேதியிலிருந்து சிலவற்றிற்கு தளர்வுகள் போடப்பட்டுள்ளது. அதன் பிறகும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக மகளிர் குழுவில் இருந்து பெண்களுக்கும் முகக் கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அனைவரும் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆரோக்கிய சேது (Aarogya Setu App) என்கிற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியில் நமது பெயர், வயது குறிப்பிட்டால் கரோனா வைரஸ் தொற்று பற்றிய விவரங்களை நமக்கு தரும். எனவே இதை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: ஒரு ரூபாய்க்கு அத்தியாவசிய பொருள்கள் - அசத்தும் தனியார் தொண்டு நிறுவனம்