ETV Bharat / state

'நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா?' - தயாநிதி மாறனின் கருத்துக்கு பாஜக கண்டனம் - Dayanidhi Maran

சென்னை: சமூக நீதிக்காக குரல் கொடுப்பதாக மார்த்தட்டிக் கொள்ளும் திமுக, சமூக அநீதியை இழைத்துக் கொண்டிருக்கிறது என பாஜக தமிழ்நாடு தலைவர் எல். முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

BJP murugan
BJP murugan
author img

By

Published : May 15, 2020, 4:25 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுகவைச் சேர்ந்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பத்திரிகையாளர் சந்திப்பில், 'நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களா, நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா?' என்று கூறி பட்டியலின மக்களை அவமானப்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

தலைமைச்செயலர் தங்களை அவமானப்படுத்திவிட்டதாகப் புலம்பும் அவர்களுக்கு, உரிய விளக்கத்தை தலைமைச் செயலர் அளித்துள்ள நிலையில், தயாநிதி மாறனின் பேச்சு ஒட்டுமொத்த பட்டியலின சமுதாயத்தை மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் அவமானப்படுத்தியுள்ளது; தலைகுனிய வைத்துள்ளது; அதிர்ச்சியளிக்கிறது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியிருப்பது சட்டப்படி குற்றம். இதனைக் கவனத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டியலின மக்களை கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தியுள்ள மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் மீது தமிழ்நாடு காவல் துறை வழக்குப்பதிந்து கைதுசெய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

BJP murugan
எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை

தொடர்ந்து பட்டியலின மக்களின் மீது தாக்குதல்களையும், அவமானத்தையும் அள்ளி வீசும் திமுகவினரை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். சமூக நீதிக்காகக் குரல் கொடுப்பதாக மார்த்தட்டிக் கொள்ளும் திமுக, சமூக அநீதியை இழைத்துக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சமஸ்கிருதம் செத்த மொழி - நாடாளுமன்றத்தை அலறவிட்ட தயாநிதி மாறன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.