ETV Bharat / state

கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை கருத்தை ஏற்க முடியாது - ஜெயக்குமார் திட்டவட்டம்! - அண்ணாமலை

அதிமுக, பாஜக கூட்டணி விவகாரத்தில் முடிவெடுப்பது தேசிய தலைமைதான் என்றும், இதில் அண்ணாமலையின் கருத்தை ஏற்க முடியாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

BJP
அதிமுக
author img

By

Published : Apr 5, 2023, 2:08 PM IST

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று(ஏப்ரல் 5) அவர் புகைப்படம் பொருத்திய உறுப்பினர் அட்டை விண்ணப்ப படிவத்தை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கினார். ஏற்கனவே திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக சார்பாகவும் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

அதிமுகவை பொறுத்தவரையில் முதலில் புதிய உறுப்பினர்களை சேர்த்து பின்னர் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும். ஆனால், உட்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெறுகிறது. இந்த உறுப்பினர் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மிக வேகமாக செயல்படுத்த எடப்பாடி பழனிச்சாமி அறியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்ப படிவத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உறுப்பினர் அட்டை விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சமூகநீதி மாநாடு குறித்து கருத்து தெரிவித்த ஜெயக்குமார், "தேசிய அளவில் ஊர், பேர் தெரியாதவர்களை வைத்து மு.க.ஸ்டாலின் சமூகநீதி மாநாடு நடத்தி இருக்கிறார். சமூக நீதியை பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது? 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றத்தின் மூலம் ஆபத்து வந்த போது சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, இட ஒதுக்கீட்டை காப்பாற்றியது ஜெயலலிதா. அவர் அருகில் இருக்கும் கி.வீரமணி சமூகநீதி காத்த வீராங்கனை என்று புகழாரம் சூட்டினார்" என கூறினார்.

அதிமுக, பாஜக கூட்டணி விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பாஜகவை பொறுத்தவரையில் கூட்டணி குறித்து முடிவெடுப்பது தேசிய தலைமைதான். அதிமுக, பாஜக இடையே கூட்டணி சுமுகமாகதான் இருக்கிறது. ஏற்கனவே அக்கட்சியில் உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித்ஷா சமீபத்தில் உறுதியாக தெரிவித்தார். அண்ணாமலை கூறும் கருத்தை ஏற்க முடியாது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் இருந்து மீண்டும் ஒரு கிங் மேக்கர்.. சாதிவாரி கணக்கெடுப்பே சரியான தீர்வு.. டி.கே.எஸ்.இளங்கோவன் சிறப்பு பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.