தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும் தொகுதிகளையும் ஒதுக்க மறுத்ததால் அதிலிருந்து தேமுதிக வெளியேறியது.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் ஆலோசனை நடத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முருகன் கூறியதாவது, "தேமுதிக விலகியதால் கூட்டணிக்குப் பாதிப்பில்லை. அதிமுக - பாஜக கூட்டணி பலமான கூட்டணி. தற்போது தேமுதிக விலகியதால் கூடுதல் இடங்களைக் கேட்டுப்பெறுவது பற்றி தேசிய தலைமை முடிவெடுக்கும்.
தொகுதிகளைப் பிரிப்பதில் கூட்டணிக் கட்சிகளிடையே எந்தச் சிக்கலும் இல்லை. விரைவில் தொகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்" என்று கூறினார்.