ETV Bharat / state

திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு - கனிமொழியிடம் விசாரணை நடத்த பாஜக வலியுறுத்தல்! - கனிமொழி பெரியார் சிலை அவமதிப்பு

திருச்சி: பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் விசாரணை நடத்தவேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

periyar statue damage bjp statement  bjp statement on periyar statue
திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு; கனிமொழியிடம் விசாரணை நடத்த பாஜக தலைவர் வலியுறுத்தல்
author img

By

Published : Sep 27, 2020, 9:30 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சியில் பெரியார் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார் செய்தாலும் அவர்களை காவல்துறையினர் கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

காவி புனிதமானது. அனைவரையும் அரவணைக்கும் தியாகப் பண்பின் குணமே காவி. அதை தவறான சிந்தனையோடு பயன்படுத்துவது பண்பல்ல. ஆனால், அதே நேரத்தில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி பெரியாரின் பிறந்தநாளன்று நான் கூறியதை மேற்கொள்காட்டி 'இதுதான் அவருக்கு நீங்கள் காட்டும் மரியாதையா' எனக் கேட்டிருப்பது அரசியல் உள்நோக்கோடு வீசியிருக்கிற கேள்வி.

  • திருச்சியில் #பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் அன்றுதான் தமிழக பிஜேபி தலைவர் முருகன், “பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை” என்றார்.

    இதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும்.. 1/2 pic.twitter.com/W1LkYtWJPW

    — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

காவல்துறையினர் விசாரித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இதற்கு உள்நோக்கம் கற்பித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் திமுகவின் வன்மமான செயல் கண்டிக்கத்தக்கது. மேலும், விசாரணை நிலுவையில் இருக்கும்போது இப்படி பேசியிருப்பது இது திட்டமிட்ட சதியாக இருக்குமோ என சந்தேகத்தையும் எழுப்புகிறது.

ஆகையால், காவல்துறையினர் கனிமொழியிடம் இதுகுறித்து விசாரித்து உண்மையை அறிய வேண்டும். இந்த அநாகரீக செயலின் பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பெரியார் சிலைக்கு காவி சாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.