துக்ளக் இதழின் 51ஆவது ஆண்டு விழா வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்தில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு அரசியல் குறித்து பேசுவது வழக்கம், இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்வதாக இருந்தது, ஆனால் அவரின் பயணம் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டது.
இதனால் துக்ளக் இதழ் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டு 'இன்றைய அரசியல்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
பாஜக தலைவர் பயணம் ஏற்கெனவே டிசம்பர் 31, ஜனவரி 1ஆம் தேதி தேதி திட்டமிட்டு இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் பயணம் ரத்துசெய்யப்பட்டது. இந்த நிலையில் துக்ளக் ஆண்டு விழாவில் கலந்துகொள்ளும் அவர், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து