ETV Bharat / state

சிவகார்த்திகேயன் தந்தை குறித்து அவதூறு கருத்து: ஹெச்.ராஜா மீது புகார்! - sivakarthigeyan father

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை இறப்பு குறித்து அவதூறு கருத்து பரப்பிய ஹெச்.ராஜா மீது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.ராஜா
hraja
author img

By

Published : May 24, 2021, 1:17 PM IST

அண்மையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம், தற்போது பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கக்கூடிய ஜவாஹிருல்லா தான்" என்றார்.

அவரின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, மனித நேயமக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அப்ரார், " நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை ஜெயிலர், மாரடைப்பு காரணமாகப் பல வருடங்களுக்கு முன்பு இறந்தார்.

ஆனால் வேண்டுமென்றே ஜவாஹிருல்லாவின் பெயரைக் கெடுப்பதற்காக, ஹெச்.ராஜா பொய்யான கருத்துகளைப் பரப்பி வருகிறார். சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். அவதூறு கருத்துகளைப் பரப்பிவிட்டு மன்னிப்பு கேட்பதையும், அவர் வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் இந்த முறை மன்னிப்பு கேட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் மனித நேய மக்கள் கட்சி சார்பாக, ஹெச்.ராஜா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தலையிட்டு ஹெச்.ராஜா மீது புகார் அளிக்க வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.