தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்காக மாநிலத் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
உள்ளாட்சித் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும் தங்களை தயார்ப்படுத்திவருகிறனர். அந்த வகையில் தமிழ்நாடு பாஜக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், அடுத்த வாரம் மாவட்ட வாரியாக 'தேர்வுக் குழுக்கள்' அறிவிக்கப்படவுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் தேர்வுக் குழுவிடம் தாங்கள் போட்டியிட விரும்பும் இடத்தின் விவரம், விண்ணப்பிக்கும் பதவியின் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் விண்ணப்பிக்கும் நபர்கள் கீழுள்ள விதிகளுக்குட்பட்டு இருக்க வேண்டும்,
* விண்ணப்பிக்கும் நபர் தீவிர பாஜக உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் நபர் மண்டலத் தேர்வு பெற்றிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கேரள பாஜக தலைவர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை மிசோரம் ஆளுநராக நியமனம்