ETV Bharat / state

திமுக சொத்து பட்டியல்: "தன்னிடம் போதிய ஆதாரம் உள்ளது" - அண்ணாமலை விளக்கம்! - DMK property list

திமுக தலைவர்கள் மீதான சொத்து பட்டியல் குறித்த தன்னுடைய கருத்துக்கு போதிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Annamalai
அண்ணாமலை
author img

By

Published : Jul 14, 2023, 3:26 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்து திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியல் குறித்த தகவலை வெளியிட்டார். மேலும் திமுக தலைவர்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அப்போது அண்ணாமலை சுமத்தினார். இதையடுத்து, அண்ணாமலைக்கு திமுக தரப்பிலிருந்து பல நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.

ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் திமுக எம்.பி.யும், மூத்த தலைவருமான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், '1957ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வைத்துள்ளேன். கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வைத்து வருகிறேன். எனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரும் மரியாதையும் உள்ளது.

அதைச் சீர்குலைக்கும் விதமாக, களங்கம் ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக சுமத்தியுள்ளார். திமுகவினர் ஊழல் செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளதாகவும் பொய்யாக குற்றம் சாட்டியுள்ளார்.

3 நிறுவனத்தில் முதலீடு: தானும் தொழில்துறை அமைச்சராக இருக்கும் என் மகன் டி.ஆர்.பி ராஜாவும் மட்டுமே பொது வாழ்வில் உள்ளோம். மற்றபடி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் யாரும் பொது வாழ்க்கையில் ஈடுபடவில்லை. ஆனால், நாங்கள் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால், அண்ணாமலை கூறும் நிறுவனங்களில், 3 நிறுவனங்களில் மட்டும் சிறு முதலீடு செய்து உள்ளேன். மற்ற நிறுவனங்கள் பங்குதாரராகவும் இல்லை, எந்த தொடர்பும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டை கூறி எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இது தவிர அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அண்ணாமலை விளக்கம்: இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என, பாஐக தலைவர் அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கில் இன்று (ஜூலை 14) நேரில் ஆஜரான அண்ணாமலை, "தான் தெரிவித்த கருத்துகளுக்கு ஆதாரம் இருப்பதாகவும், மக்களிடம் இருந்து கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சொத்துப் பட்டியல் வெளியிட்டதாகவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும்" தெரிவித்தார்.

அண்ணாமலை கூறிய இந்த தகவலையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சந்திரயான் 2க்கும், 3க்கும் இது தான் வித்தியாசம்: விஞ்ஞானி அளிக்கும் தகவல்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.