ETV Bharat / state

கதருக்குள் காவி-காவிக்குள் கதர்...! - காங்., பாஜகவை கலாய்த்த சீமான்

சென்னை: காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் கொள்கை அளவில் எந்த வித்தியாசமும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Seeman videos
author img

By

Published : Oct 14, 2019, 10:01 PM IST

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ராஜிவ்காந்தி கொலை வழக்கை கடந்த 28 ஆண்டுகளாகப் பேசிக்கொண்டு, விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிட்டதாகக் கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானம். இலங்கைத் தமிழர்கள் வாழ வழியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது கைக்குழந்தை வரை பயங்கரவாதியாகப் பார்க்கின்றனர்.

தேசிய ஒருமைப்பாட்டைப் பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு என்ன உரிமை உள்ளது. இலங்கை மக்களை அடித்து விரட்டி கால்நடையாக தமிழ்நாட்டிற்கு வந்தபோது எங்கே சென்றார்கள். ராஜிவ்காந்தியை கொன்றுவிட்டதாகக் கூறிதான் போர் செய்து லட்சக்கணக்கான மக்களை கொன்றார்கள். இலங்கையில் போர் நடத்தியது காங்கிரஸ்தான்.

சத்தியத்தின் பக்கம்தான் உறுதியாக நிற்க முடியும். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் ராணுவ பிடியில் இருப்பதாகத் தகவல் சொன்னபோது பிரபாகரன் குடும்பத்தினர் ஒருவரும் உயிருடன் இருக்கக் கூடாது என்று சொன்னது யார். அதே காயமும் வன்மமும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளாக அநீதிக்கான நீதியைப் பெற அவ்வளவு தடைகள். ஒருவரின் மரணத்திற்காக ஒரு இனத்தின் மரணத்தையே சமப்படுத்தி நிறுத்தியுள்ளனர்.

சீமான் பேட்டி

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சமமாகத்தான் பார்க்கிறோம். அணு உலையை எதிர்த்துப் போராடினால் தேச துரோகி என இரண்டு கட்சிகளும் சொல்கிறது. நீட், ஜிஎஸ்டி ஆகியவற்றை கொண்டுவந்தது காங்கிரஸ், அதை செயல்படுத்தியது பாஜக. நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருப்பதற்கு ஜிஎஸ்டியால்தான் உலக வங்கியே கூறுகிறது. கதர் கட்டிய பாஜக காங்கிரஸ், காவி உடுத்திய காங்கிரஸ் பாஜக. இரு கட்சிகளுக்கும் கல்வி, பொருளாதார, வெளியுறவு கொள்கைகள் ஒன்றுதான்.

சீன அதிபர் தமிழ்நாட்டிற்கு வந்ததால், பிரதமர் வேட்டி கட்டியிருப்பார். தமிழனின் பாரம்பரிய உடையை பிரதமர் அணிந்தது மகிழ்ச்சிதான்”என்றார்.

இதையும் படிங்க: சீமான் மீது தேசதுரோக வழக்குப்பதிய வேண்டும் - காங். எம்.பி. ஜெயக்குமார்

Intro:சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டிBody:பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிக்கு எந்த வித்தியாசமும் கிடையாது
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி;

ராஜீவ்காந்தி கொலை வழக்கை கடந்த 28 ஆண்டுகளாக பேசிக் கொண்டு விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிட்டதாக கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்துக் கொண்டு இருக்கிறார்கள். தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானம். வாழ வழியின்றி வெளிநாடுகளுக்கு செல்லும் போது கையில் உள்ளா குழந்தை வரை பயங்கரவாதியாக பார்க்கின்றனர். இந்த தடையால் சர்வதேச அமைப்பிடம் சென்று நீதி கேட்கும் போது தடை செய்யப்பட்ட அமைப்பின் பிரதிநிதிகளாக பார்க்கின்ற போக்காக உள்ளது. 7 பேர் விடுதலைக்கு எவ்வளவு முட்டுக்கட்டைகள். காந்தியை நாங்கள் தான் கொன்றோம். கோட்சே தாமதமாக கொன்றுவிட்டதாக கூறும் போது ஏன் கோபப்படவில்லை. காந்தி உருவப்படத்தை சுட்டு போதும் ஏன் கோபப்படவில்லை. இதை எவ்வளவு காலத்திற்கு பேச போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

தேசிய ஒருமைப்பாட்டை பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு என்ன உரிமை உள்ளது. காவிரி நதி நீரில் நிலைப்பாடு என்ன. ஆட்சியில் இருந்தபோது நதி நீரை பெற்று தர முடிந்ததா. மக்களை அடித்து விரட்டி கால்நடையாக தமிழகத்திற்கு வந்தபோது எங்கே சென்றார்கள். பேசுவதால் ஒருமைப்பாடு என்ன கெட்டுபோய் விட்டது.

விடுதலைப்புலிகள் தான் கொன்றார்கள் என்று சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்றால் நம்பிவிட்டார்களா.

ராஜீவ்காந்தியை கொன்று விட்டதாக கூறி தான் போர் செய்து லட்சக்கணக்கான மக்களை கொன்றார்கள். இலங்கையில் போர் நடத்தியது காங்கிரஸ் அரசு தான். காங்கிரசுடன் திமுக நின்றதை யாராவது மறுக்க முடியுமா.

சாத்தியத்தின் பக்கம் தான் உறுதியாக நிற்க முடியும். பிரபாகரன் மகன் பாலசந்திரன் ராணுவ பிடியில் இருப்பதாக தகவல் சொன்னபோது பிரபாகரன் குடும்பத்தினர் ஒருவரும் உயிருடன் இருக்க கூடாது என்று சொன்னது யார்?

அதே காயமும் வன்மமும் கொந்தளித்து கொண்டு இருக்கிறது. 10 ஆண்டுகளாக அநீதிக்கான நீதியை பெற கூட முடியவில்லை . அவ்வளவு தடை, இடையீறு. ஒரு மரணத்திற்காக ஒரு இனத்தின் மரணத்தை சமப்படுத்தி நிறுத்தி உள்ளனர்.

என் மீது இதுபோன்ற லட்சக்கணக்கான வழக்குகள் இருக்கிறது.

பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சமமாக தான் பார்க்கிறோம். கச்சத்தீவு கொடுத்து கொடுத்தது தான் என 2 கட்சிகளும் சொல்கிறது. அனு அலை எதிர்த்து போராடினால் தேச துரோகி என 2 கட்சிகளும் சொல்கிறது. நீட் மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றை கொண்டு வந்தது காங்கிரஸ். அதை செயல்படுத்தியது பா.ஜ.க.

நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருப்பதற்கு ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தது தான் காரணம். எல்லா திட்டங்களையும் 2கட்சிகள் தான் கொண்டு வந்தது. கதர் கட்டிய பா.ஜ.க. காவி கட்டிய காங்கிரஸ். 2 கட்சிகளுக்கும் வித்தியாசம் கிடையாது. கொள்கையில் என்ன வேறுபாடு உள்ளது. ராமர் கோவிலை காங்கிரஸ் வந்து தான் கட்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறுகிறார்.

2 கட்சிகளுக்கும் கல்வி, பொருளாதார, வெளியுறவு கொள்கைகள் ஒன்று தான். தனியார் மையம் கொள்கையால் 2 கட்சிகளுக்கும் என்ன மாற்று கருத்து உள்ளது. ரெயில்வே துறையையும் தனியார் மையம் ஆக்கப்பட்டு வருகிறது.

சீன அதிபர் வந்தபோது பிரதமர் தமிழகத்தில் நடப்பதால் வேட்டி கட்டியிருப்பார். தமிழன் பாரம்பரிய உடையை பிரதமர் அணிந்தது மகிழ்ச்சி தான்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.