ETV Bharat / state

உணவின்றி வாடும் கடற்கரையோரப் பறவைக் கூட்டம்

author img

By

Published : Apr 4, 2020, 11:15 AM IST

சென்னை: கரோனா தொற்று காரணமாக சென்னையில் வெறிச்சோடி காணும் கடற்கரையில், அலாதி இன்புற்று சுற்றித் திரிந்தப் பறவைகள் உணவின்றி வாடுகின்றன.

birds
birds

வானத்தில் கூட்டம் கூட்டமாய் பறந்து செல்லும் பறவைகளைக் காண்பதே தனி சுகம். அவைப் பறந்து செல்லும் அழகும், ஒழுக்கமும் பார்க்க பார்க்க பிரமிப்பூட்டும். இயற்கையின் உயிர் நாடியாக நீர், நிலம் என உணவுச் சங்கிலியின் அனைத்து இடங்களிலும் வாழும் உயிரினம் பறவைகள் மட்டுமே.

ஒரு பறவையின் இறப்பு என்பது சுற்றுச்சூழல் பாதிப்பின் அறிகுறியாகும். கடற்கரையோரமாக மக்களை வரவேற்க காத்திருக்கும் பறவைகள் கரோனா பாதிப்பால் உணவின்றி வாழ்ந்து வருவதுதான் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனதை ரசிக்க வைக்கும் கடற்கறையோர பறவைக் கூட்டம் உணவில்லாமல் எங்கு ஓய்வெடுக்கும் என்பது மனதில் ஒரு கேள்வியாக உள்ளன. உணவைத் தேடி அலையும் பறவைகள் பற்றிய சிறியப் பார்வை.

ஊரடங்கு காரணமாக, சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைப் பூங்கா போன்ற அனைத்து பொழுதுபோக்கு தளங்களும் மூடப்பட்டுள்ளன. கடற்கரை, பூங்காக்களுக்கு வந்து செல்லும் பறவைகள், மனித நடமாட்டம் இல்லாததால் உணவின்றி வாழ்ந்து வருகின்றது.

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை போன்ற முக்கியக் கடற்கரைகளுக்குக் காலை, மாலை ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன. காலை, மாலை உடற்பயிற்சிக்குச் செல்லும் மக்கள், பிற வேலைக்கு செல்லும் மக்கள் அனைவரும் அங்கு வந்து செல்லும் பறவைகளுக்கு உணவு அளிப்பார்கள். தற்போது அனைத்து கடற்கரை மற்றும் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளதால் பறவைகள் உணவின்றி தவித்து வருகின்றன.

இது தொடர்பாக 'பறவை' டென்சில் (உளவியல் நிபுணர் ) கூறுகையில், "நான் அதிகாலை, 5:30 மணி, மாலை, 4:30 மணி என, இரு வேலையும், பிரத்யேகமாக செய்யப்பட்ட மரப்பெட்டிகளில், பறவைகளுக்குத் தேவையான உணவையும், பாத்திரங்களில் தண்ணீரையும் நிரப்பி விடுவேன்.

உணவுக்காக காத்திருக்கும் பறவைகள்
உணவுக்காக காத்திருக்கும் பறவைகள்

அங்குப் புறா, கிளி, குருவிப் போன்ற பறவைகள் வந்து உணவு உண்டு, தண்ணீர் அருந்திவிட்டு செல்லும். இந்தக் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு பறவைகள் கூட்டம் அதிக அளவில் வருவதால், ஒரு நாட்களுக்கு 3 முறை உணவு அளித்து வருகிறேன். இதில் இருந்தே தெரிகிறது பறவைகளுக்குச் சரியான உணவு கிடைக்கவில்லை என்று. பறவை மனிதர்களுடன் வாழும் ஒரு உயிராகக் கருத வேண்டும். அவைகளுக்கு உணவளிப்பது அரசின் கடமையாகும்.

அரசின் கடமை மட்டும் இல்லாமல் மக்கள் தானாக முன்வந்து அனைத்து பறவைகளுக்கும் மாடியில் உணவு, தண்ணீர் வைக்க வேண்டும். இயற்கை சுழற்சியில் வாழும் அனைத்து ஜீவராசிகளையும் பராமரிப்பது நமது கடமையாகும். அவைகள் இல்லையென்றால் நாம் இல்லை.

இதைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி பூங்கா மற்றும் கடற்கரையில் பறவைகளுக்குத் தண்ணீர் தொட்டிகளும் மற்றும் உணவுகளும் அளிக்க வேண்டும்.

உணவைத் தேடி அலையும் பறவைகள்

பறவைகள் வாழும் செடிக்கொடிகளை அழித்துவிட்டு அவைகளில் இடத்தை நாம் எடுத்துவிட்டால் அவைகள் உணவிற்கு எங்குச் செல்லும்? எனவே, பறவைகளுக்கு உணவளிப்பது என்பது நமது முதன்மையான கடமையாகும். உயிா்களுக்கு உணவு அளிப்பதே ஜீவ காருண்யம் என வள்ளலாா் கூறியது போல் நாம் நடந்து கொள்ள வேண்டும்" என மனித நேயத்துடன் எடுத்துரைத்தார்.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால் கைது - க.பாண்டியராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.