ETV Bharat / state

இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயரும்! - Annual property tax increase bill tabled in Legislature

ஆண்டுதோறும் சொத்து வரியினை உயர்த்துவதற்கு நகராட்சி மன்றங்களானது நடவடிக்கை எடுக்கவேண்டுமென அரசானது முடிவு செய்துள்ளது. அது தொடர்பான சட்ட முன்வடிவை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இனிமேல் ஆண்டுதோறும் சொத்து வரி உயர்கிறது... bill-to-increase-property-tax-annually-in-municipal-areas-was-tabled-in-the-tamilnadu-legislative-assembly தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு

author img

By

Published : May 10, 2022, 4:12 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரிகளை உயர்த்தி தமிழ்நாடு அரசு (ஏப்.1) அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15ஆவது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022ஆம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.

எனவே, நகராட்சிகள், பேரூராட்சிகளைப் பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு, ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின் தீர்மானம் பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தது.

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கழிவுநீர் அகற்றும் நடவடிக்கையை ஒழுங்குபடுத்துவதற்கான சட்ட மசோதாவை (மே.9) சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்துள்ளார். அதில், "2010 ஆம் ஆண்டில், கழிவுநீர் அகற்றல் அமைப்பு மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் தொழிலாளர்களின் நுழைவை செய்வதற்கான ஆணைகளை அரசானது வெளியிட்டது.

நீர்ப்பீச்சும் இயந்திரங்கள், சேற்றுப்படிவினை அகற்றும் இயந்திரங்கள், நடமாடும் இயந்திரக்குழாய்கள் மற்றும் பிற இயந்திரக் கருவிகளை வாங்கியதன் மூலம் அழிநீர் சுத்திகரிப்பு மற்றும் பேணுதலின் இயந்திரமயமாக்கத்தை அறிமுகப்படுத்தியது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு

தமிழ்நாடு (2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி) மக்கள் தொகையில், சுமார் 48.45 விழுக்காட்டளவு மக்கள் நகரப்புறப் பகுதிகளில் வசிக்கின்ற, இந்தியாவிலுள்ள மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களுடன் ஒன்றாக இருக்கிறது.

கழிவுநீர் மேலாண்மையைப் பொறுத்த வரை, சிறந்த சுகாதார வசதிகளை வழங்குவதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் நிலத்தடி கழிவு நீர் அகற்றத் திட்டம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களில் செயல்படுத்துதலுக்கு, தமிழ்நாடு அதிக முன்னுரிமை அளித்துள்ளது.

திறந்த வெளியில் மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடுகள் மற்றும் கழிவுநீரை பாகுபாடின்றி வெளியேற்றுதல், சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்துகிறது. எனவே, மலக்கசடுகள் மற்றும் கழிவு நீரின் பாதுகாப்பான வெளியேற்றுதலை உறுதி செய்வதற்கு, சரக்குந்துகள், இழுவை வண்டிகள் அல்லது கழிவு நீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குளங்களின் வெளியேற்றுதலுக்காக, பயன்படும் பிற வாகனங்கள் எதனின் இயக்கம் மற்றும் போக்குவரத்தினை ஒழுங்கு முறைப்படுத்துதல் தவிர்க்க முடியாததாகும்.

சிறிய மாநகரங்கள் மற்றும் நகரங்கள் மற்றும் பெருநகர வளர்ச்சிகளுக்கான ஒரு சாத்தியமான சுகாதார முறையாக மலக்கசடு மற்றும் கழிவுநீர் மேலாண்மையின், முக்கியத்துவத்தை (FSSM) அரசானது அங்கீகரித்துள்ளது. மலக்கசடு மற்றும் கழிவுநீர் மேலாண்மையில் தேசிய கொள்கைக்கு இணங்கிய வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் முழுகழற்சி துப்புரவை வழங்குவதற்காக, கழிவுநீர் தொட்டிகளை காலமுறையில் சுத்தம் செய்தல் மற்றும் மலக்கசடுகள் மற்றும் கழிவு நீரை கொண்டுசெல்லுதல், சுத்திகரித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு விரிவான செயல்திட்டமானது வகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சொத்துவரியினை உயர்த்துவதற்கு நகராட்சி மன்றங்களானது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசானது, முடிவு செய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு: எவ்வளவு அதிகம்...? என்னென்ன மாற்றம்...?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.