ETV Bharat / state

இருசக்கர வாகனங்கள் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய திருடன் - மேற்கு தாம்பரம்

சென்னையில் ஒரே தெருவில் நான்கு இருசக்கர வாகங்களை திருடி, விற்பனை செய்து வந்தவரை சிசிடிவி உதவியுடன் காவல் துறையினர் கைது செய்தனர்.

இருசக்கர வாகனங்கள் திருட்டு
இருசக்கர வாகனங்கள் திருட்டு
author img

By

Published : Jul 30, 2021, 8:18 AM IST

சென்னை: மேற்கு தாம்பரம் இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் வைகைநாதன் (30). இவர் ஜூலை 27ஆம் தேதி மாலை மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையிலுள்ள துணிக்கடைக்கு தனது மனைவியுடன் சென்றார்.

அப்போது கடைக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம், திரும்பி வந்து பார்த்தபோது மாயமாகி இருந்தது.

சிசிடிவி மூலம் சிக்கிய திருடன்

இது குறித்து அவர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் பதிவாகியிருந்தது.

அதனடிப்படையில், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இருசக்கர வாகனத்தை திருடியவர் அதே பகுதியில் வேலை செய்யும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராகவன் (30) என்பது தெரியவந்தது.

திருடனுக்கு சிறை

பின்னர், அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சண்முகம் சாலையில் மட்டுமே இதுவரை நான்கு இருசக்கர வாகனங்களை திருடி, சொந்த ஊருக்கு அனுப்பி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஊரடங்கால் வேலையிழப்பு: இருசக்கர வாகனம் திருடிய இளைஞர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.