ETV Bharat / state

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது - பீகார் உயர்மட்ட குழு - தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள்

பொய்யான வீடியோக்களை வடமாநிலத்தவர்கள் நம்பி வரும் எண்ணத்தை போக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது என்று பீகார் மாநில ஊரக வளர்ச்சி துறையின் செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 4, 2023, 10:47 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்கள் மற்றும் வட இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளின் உயர்மட்ட குழு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்த், சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி மற்றும் ஹோட்டல், கட்டுமானம், தொழில்துறை, வணிகம், பீகார் மக்கள் அசோசியேஷன் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனை நடத்தியது.

இந்த குழுவில் பீகார் மாநில கிராம வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன், தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலோக்குமார் மற்றும் சந்தோஷ் குமார் எஸ்.பி உள்ளிட்ட நான்கு பேர் இடம்பெற்றுள்ளர். இவர்கள் முன்னதாக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்திருந்தனர். அதன்பின் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இதற்கு முன்பாகவே, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குழு தொழிலாளர் நல ஆணையத்தில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.

பீகார் மாநில உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், “நல்ல முறையில் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். தமிழ்நாடு சார்பாக போதிய ஆதரவை அவர்களுக்கு நல்ல முறையில் வழங்கி வருகிறோம். பீகார் மாநில தலைமைச் செயலாளர் தமிழ்நாடு மாநில தலைமை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

அதில், இரு மாநில உறவை சீர்குலைக்கும் வகையில் இந்த பொய் பிரச்சாரப் பரப்பரை மேற்கொள்ளப்படுவதாக உளவுத்துறை மேற்கோள் காட்டியாதை குறிப்பிட்டார். பீகார் அசோசியேசன் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து கருத்துக்களை பீகார் அரசு அதிகாரிகள் கேட்டனர். வணிகர் சங்கம், ஓட்டல், தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்” என்றார்.

அடுத்ததாக பேசிய பீகார் மாநில ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன், “தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பீகார் மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களிடமும் தொலைபேசி வாயிலாக பேசினோம். பொய்யான வீடியோக்களை சரியானவை என்று நம்பி வரும் எண்ணத்தை போக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது” என்றார்.

பொய்யான வீடியோக்கள் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இருந்து வந்ததை தொடர்ந்து அந்த இடங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம் என்றும் கூறினார். இந்நிலையில், இரண்டு நாள்கள் ஆய்வுக்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து இதுகுறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம்.. பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.. திருச்சி எஸ்.பி. சுஜித் குமார்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.