ETV Bharat / state

நர பலியில் இருந்து தப்பியது எப்படி? - விவரிக்கிறார் தமிழகத்தில் தஞ்சம் அடைந்த போபால் பெண் - போபால் பெண்

“நரபலி ’’ கொடுக்க திட்டம் தீட்டிய மாற்றாந்தாய் பிடியில் இருந்து தப்பிய ஷாலினி ஷர்மா, தமிழ்நாடு வந்து சேர்ந்ததை ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் விவரிக்கிறார்.

நர பலியில் இருந்து தப்பியது எப்படி? - தமிழ்நாட்டுக்கு வந்த போபால் பெண் விளக்கம்
Etv Bharat
author img

By

Published : Feb 25, 2023, 8:12 PM IST

Updated : Feb 25, 2023, 8:55 PM IST

நர பலியில் இருந்து தப்பியது எப்படி?

சென்னை: இருள் கவிந்த அதிகாலை 3.30 மணியளவில் சென்னை செல்லும் ரயிலை எதிர்நோக்கி, போபால் ரயில் நிலையத்தில் பதற்றத்துடனும், படபடப்புடனும் ஷாலினி ஷர்மா (23) நின்றுகொண்டிருந்தாள். உடன் பாதுகாப்பிற்காக ஒரு தமிழ் நண்பர் இருந்தார். கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் வந்தவுடன் ஏறிக்கொண்ட, ஷாலினி ஷர்மா முகத்திலொரு விடுதலை உணர்வு. அடுத்து என்ன என்ற பெரிய திட்டமிடல் இன்றி, வீட்டை விட்டு வெளியேறி முன்பின் பார்த்திராத சென்னைக்கு தனது பயணத்தை தொடர்ந்தார்.

ரயிலேறும் முன்னர், தனது செல்போனை மதுரா செல்லும் ரயிலில் தூக்கி எறிந்தார் ஷாலினி. “நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். யாரும் என்னைத் தேட வேண்டம்” என வீடியோ மெஸ்சேஜை அனுப்பிவிட்டு அதன் பிறகே செல்போனை வீசி எறிந்துள்ளார். ஆனால், அவரது செல்போன் அடுத்த 6 மணி நேரத்திற்குள்ளாக அரசியல் செல்வாக்குள்ள பெற்றோரின் முயற்சியால் கைப்பற்றப்படுகிறது. தீவிர தேடுதல் வேட்டையும் தொடங்கியது.

உயிரைப் பிடித்துக் கொண்டு ஏன் வரவேண்டும்? :

“எனது சிற்றன்னை, சுதா ஷர்மா, என்னை நரபலி கொடுக்க திட்டமிட்டர். தற்செயலாக எனக்குத் தெரியவந்தது. மாற்றாந்தாயின் செல்போன் ஸ்டோரேஞ் அதிகமானதால், அழித்துவிட்டு தருமாறு என்னிடம் கொடுத்தார். அதில் ஒரு ஆடியோவைக் கேட்டு நான் பயத்தில் உறைந்தே போனேன். மகா சிவராத்திரிக்கு நாள் குறித்திருந்தனர். அதன் பிறகே தப்பிக்கும் வழியை தேடினேன்” என்று விளக்குகிறார். முதலில் எனது பிறந்தநாள், பின்னர் ஹோலி பண்டிகை, அதன் பின்னர் மகா சிவராத்திரி என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

“எனது தம்பி, யஷ், நரபலி கொடுக்கப்பட்டுள்ளான் என்றே நம்புகிறேன். மேலும் ஒருவரையும் எனது மாற்றாந்தாய் நரபலி கொடுத்துள்ளார். தம்பி காணாமல் போனதாக கூறிய பெற்றோர், தேடவும் இல்லை இதுவரையிலும் காவல் துறையில் ஒரு புகாரும் கொடுக்கவில்லை. எனது தாயின் மாந்த்ரீக செயல்பாடுகள் தெரிந்தும், தந்தையார் எதுவும் கண்டுகொள்வதில்லை,” என்கிறார். இவரது தாய் ஒரு மாற்றந்தாய் என்பது கோவிட் காலத்தில்தான் தெரியவந்தது. உத்தரப் பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட எங்கள் குடும்பம், தந்தையார், பிரேம்சந்த் ஷர்மாவுக்கு அரசு வேலை கிடைத்ததால், இங்கு குடி பெயர்ந்தோம். எனது மாற்றாந்தாயிக்கு, 3 பெண்கள், ஒரு பையன் என 4 பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த புதன் கிழமை (பிப்.15) அன்று புறப்பட்டு, வெள்ளிக்கிழமையன்று (பிப்.17) சென்னை வந்தடைந்தார். ஆர்எஸ்எஸ்-ன் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ABVP)-ன் நிர்வாகியான ஷாலினி, தற்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் (தபெதிக) பாதுகாப்பில் இருக்கிறார்.

தமிழ் நாட்டைத் தேர்ந்தது ஏன்? எவ்வாறு தபெதிக-வில் அடைக்கலம் கிடைத்தது?

போபாலில் பட்ட மேற்படிப்பு வரை படித்த ஷாலினி, பெற்றோரின் வற்புறுத்தலால், ABVP-ல் சேர்ந்து அமைப்பில் ஒரு நிர்வாகியாக உயர்ந்தார். வீட்டை விட்டு வெளியே செல்ல இயலாத சூழலில், வெளிக் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பாகவே ABVP-ல் இணைந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த தக்‌ஷினாமூர்த்தி மற்றும் விக்னேஷ் இருவரும் ABVP-ல் உடனிருந்த நிர்வாகிகள். தனது மாற்றாந்தாயின் கொலைத் திட்டத்தை, இருவரிடமும் தெரிவிக்க அவர்கள் உதவ முன்வந்தனர்.

ஷாலினியின் குடும்பம் ஆளும் பாஜகவிலும் ஆட்சியிலும் செல்வாக்குடன் உள்ளதால், தமிழ்நாடு தான் மிகவும் பாதுகாப்பானது என்று முடிவானது. “வேலூரைச் சேர்ந்த தக்‌ஷிணாமூர்த்தியும், மயிலாப்பூரைச் சேர்ந்த விக்னேஷும் எங்களை அனுகியபோது, முதலில் நாங்கள் இதனை நம்பவில்லை. அவர்களோ பரிவாரத்தினர். நேரில் வரவழைத்து பேசிய போது, அவர்களால் தகுந்த பாதுகாப்பு தர இயலாது, எங்களால்தான் முடியும் என வற்புறுத்தினர். பின்னரே, நாங்கள் முன்வந்து ஏற்றுக்கொண்டோம்,” என்று தபெதிகவின் ஜனா தெரிவித்தார்.

”என்னை ரயில் ஏற்றிவிட்டு சென்ற தக்‌ஷிணா மூர்த்திக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரது பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். CCTV காட்சிகளின் அடிப்படையில் அவரைப் பிடித்துவைத்துள்ளார்கள். அவர் அங்கு பர்கத்துல்லா பல்கலையில் சட்டம் பயிலும் மாணவர்” என்று கூறுகிறார் ஷாலினி. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஷாலினிக்கு காவல் துறை பாதுகாப்பு அளித்துள்ளது. ஷாலினியின் வழக்கு, மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: "நரபலி அச்சத்தால் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த போபால் பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்" - காவல்துறை!

Last Updated : Feb 25, 2023, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.